இன்று நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட் மிக அற்ப்புதமான விட்ஜெட். இந்த Recommended விட்ஜெட் மூலம் வலைப்பூவின் pageviews அதிகரிக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும். நம் பதிவிற்கு வரும் வாசகர்கள் பதிவின் கீழ் பகுதிக்கு சென்றால் இந்த விட்ஜெட் தோன்றும். உங்களின் பாப்புலர் பதிவுகள் மட்டும் இதில் தெரிவதால் வாசகர்கள் கிளிக் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விட்ஜெட் அதிக இடமும் எடுத்து கொள்வதில்லை. சமூக தள பட்டன்களும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த விட்ஜெட்டை இணைப்பதற்கான வழிமுறைகள்:
- முதலில் இந்த லிங்கில் www.simplereach.com கிளிக் செய்து விட்ஜெட் வழங்கும் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அங்கு உள்ள Get it now என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த விண்டோவில் உங்கள் விவரங்களை கொடுத்து உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.
- விவரங்களை கொடுத்த பின்னர் கீழே உள்ள SIGN UP என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தை minimize செய்து வைத்து கொள்ளுங்கள்.
STEP-2
- அடுத்ததாக உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design ==> Edit Html ==> Download Full Template அழுத்தி உங்கள் பிளாக்கர் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
STEP-3
- அடுத்து மறுபடியும் மினிமைஸ் செய்து வைத்துள்ள Simple Reach பக்கத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- முதலில் பிளாக்கர் என்பதை தேர்வு செய்து பிறகு Choose file என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்த உங்களின் டெம்ப்ளேட்(.xml) பைலை தேர்வு செய்து Upload your Template என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் நான் கீழே படத்தில் காட்டி இருக்கும் லிங்கை கிளிக் செய்து விட்ஜெட் பொருத்தப்பட்ட டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
STEP-4
- இப்பொழுது மறுபடியும் Design==>Edit Html சென்று Choose file என்பதை அழுத்தி இப்பொழுது டவுன்லோட் செய்த விட்ஜெட் பொருத்தப்பட்ட டெம்ப்ளேட்டை தேர்வு செய்து அருகில் உள்ள Upload பட்டனை அழுத்தி இந்த புதிய டெம்ப்ளேட்டை இணைத்து விடுங்கள்.
அவ்வளவு தான் நீங்கள் வெற்றிகரமாக விட்ஜெட்டை இணைத்து விட்டீர்கள். ஆனால் இந்த விட்ஜெட் உடனே உங்கள் தளத்தில் தெரியாது அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள் இந்த விட்ஜெட் இனைந்து விடும்.
மற்றும் இந்த simple reach தளத்தில் லாகின் செய்து Reports என்பதை அழுத்தினால் எத்தனை பேருக்கு இந்த விட்ஜெட் தெரிந்துள்ளது எத்தனை பேர் இதில் கிளிக் செய்துள்ளனர் என்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம். ஒரே ஐடியில் பல வலைப்பூக்களை சேர்த்துக்கொள்ளும் வசதி உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
மற்றும் இந்த தளத்தில் Manage சென்றால் உங்கள் பிளாக்கில் இருந்து திரட்டப்பட்ட அனைத்து இடுகைகளையும் காணலாம்.
No comments:
Post a Comment