Tuesday, January 10, 2012

ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (9-01-2012)


இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

VLC Media Player 1.2.0 Pre4
பிரபல மீடியா பிளேயர் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் மறைந்து உள்ளது. எல்லா வகையான வீடியோ ஆடியோக்களை கண்டு ரசிக்க கூடிய இலவச பயனுள்ள மென்பொருளாகும். இந்த மென்பொருளில் நம் விருப்பப்படி இதன் தோற்றத்தை மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது. இப்பொழுது இந்த பதிப்பு சோதனை கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் போது சேவைக்கு வெளியிடப்படும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - VLC Media Player 1.2.0 Pre4


Wordpress 3.3
பிரபல இணைய ஹாஸ்டிங் நிறுவனமான வேர்ட்பிரஸ் வெளியிட்டுள்ள அவர்களின் அடுத்த வெர்சன் இது. பிளாக்கர் ஹாஸ்டிங் நிறைய பேர் உபயோகித்து கொண்டிருந்தாலும் இப்பொழுது அதிக வளர்ச்சிப்பாதையில் உள்ளது வேர்ட்பிரஸ் தளம் தான். இதில் உள்ள வசதிகளே இதனை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்கிறது. பல மேம்ப்படுதப்பட்ட வசதிகளை கொண்டு இந்த புதியப் பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Wordpress 3.3


Firefox 10.0 Beta 3
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 10.0 Beta 3


CCleaner v3.14
கணினிகளில் உள்ள தேவையற்ற பைல்களை சரியாக கண்டறிந்து அழித்து கணினியை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் CCLEANER மென்பொருள் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் நிறுவனத்தினர் அடிக்கடி மென்பொருளை மேம்படுத்தி புதிய வெர்சன்களை வெளியிடுகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது புதிய பதிப்பான CCLEANER V3.13.1600 என்ற பதிப்பை வெளிட்டு உள்ளனர்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - CCLEANER V 3.14

Picasa 3.9
பிரபல கூகுள் நிறுவனத்தின் மென்பொருளாகும். கணினியில் உள்ள புகைப்படங்களை பார்க்கவும், எடிட் செய்யவும் ஆல்பம் உருவாக்கவும் மிகவும் சிறந்த மென்பொருளாகும். கணினியில் இருந்தே இணைய ஆல்பங்களை சுலபமாக இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதியப்பதிப்பான picasa 3.9 வெர்சன் வெளிவந்துள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Picasa 3.9

No comments:

Post a Comment