ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேருடன் பேசும் வசதி கொண்ட அலைபேசிகள் தற்போது இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் Conference call செய்து பேசிய உரையாடலை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் நாளும் புதிது புதிதாக சேவைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நேரடியாக பேசவும் அந்த உரையாடலை சேமித்து வைக்கவும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://keeptherecord.com
இத்தளத்திற்கு சென்று Start now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் பெயரும் இமெயில் முகவரியும் கொடுத்து உள்நுழைய வேண்டும் அடுத்து வரும் திரையில் Room Code என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களையும் இத்தளத்திற்கு வர செய்து Room code கொடுத்து பேச ஆரம்பிக்கலாம்.கணினி வசதி இல்லாதவர்கள் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு Room code கொடுத்து Conference call -ல் இணையலாம். யார் Room உருவாக்குகிறார்களோ அவர்கள் எப்போது வேண்டுமானாலும் Call Cut செய்து வெளியே வரலாம், Conference call -ல் நாம் எல்லாம் பேசி முடித்தபின் இமெயில் வழியாக அந்த உரையாடலை MP3 கோப்பில் தரவிரக்க இணைப்பும் கொடுக்கிறது இத்தளம். மாணவர்கள்,ஆசிரியர்கள் என Conference call பேசும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Nice Post! Have a look at Arivuk Kalanchiyam for interesting posts. Thank you.
ReplyDelete