3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு
இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று
நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக
3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல
நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும்
3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம்
கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே
அதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத்
தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.3dtin.com
3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல்
இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு
சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம்
மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும்
பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ்
வரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக
வரைந்து பழகலாம்.
No comments:
Post a Comment