Tuesday, November 30, 2010

சூரிய குடும்பத்தில் புதிய கிரகம்


Mars (back left), Mercury (back right), Moon (...

Image via Wikipedia

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்து வருகின்றன. வான்வெளியில் மனிதனின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவில்லை. புதிதுபுதிதாக கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஆய்வு செய்து அதன் நிலை, அளவு உள்ளிட்ட பல விவரங்களை முழுவதும் அறிந்தபின்னர் அந்த கிரகம் குறித்த தகவலை வெளியிடுகின்றனர்.

அப்படி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்தான், கோர்ட் – 9பி. இது வெள்ளி அளவிற்கு பெரிய கிரகம் என்கின்றனர். பிரெஞ்ச் வான்வெளி ஆராய்ச்சி அமைப்புதான் இந்த கிரகத்தை கண்டுபிடித்தது. பின்னர், பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், மற்றும் ஐரோப்பிய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆராய்ச்சி செய்தன.

உலகம் முழுவதும் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட வான்வெளி அறிஞர்கள் இந்த கண்டுபிடிப்பை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து ஆராய்ந்தனர். இறுதியில் இது ஒரு கிரகம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த கிரகம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியிருக்கிறது என்கின்றனர் அறிஞர்கள். பூமியைப் போன்று 20 பங்கு கடினமாக பொருட்கள் இந்த கிரகத்தில் உள்ளன. குறிப்பாக பாறைகள், உயர் அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது என்பது இவர்களின் கருத்து. அளவில் சனி மற்றும் வெள்ளி கிரகங்களை ஒத்துள்ளது.

கிரகத்தின் நீள அகலத்தை அளப்பது ஒரு சுவாரசியமான விஷயம். கிரகத்தின் மேற்பகுதி மீது ஒரு புள்ளியாக வெளிச்சம் செலுத்தப்படுகிறது. அது ஒரு சுற்று சுற்றி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேருவதை வைத்து அதன் தன்மை முடிவு செய்யப்படுகிறது. அப்படி இந்த கொராட் – 9பியை ஒளி சுற்றிவர 95 நாட்கள் ஆனது. இதன் காரணமாகத்தான் இதை வெள்ளிக்கும் சனிக்கும் இணையானது என்று கூறினார்கள்.

பூமியில் இருந்து 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் சூரிய குடும்பத்தில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ளதால் இதுவரை கண்டுபிடிக்கபடாமல் இருந்துள்ளது. வான்வெளி ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல். இதன் தொடர்ச்சியாக பல்வேறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்பது இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் டிம்லிஸ்டர், ரச்சேல்ஸ்ட்ரீட், மார்டின் ஹைடாஸ் ஆகியோரின் கருத்து.

No comments:

Post a Comment