வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் பிரபல ரோரண்ட் பற்றியது நிறைய நண்பர்களுக்கு இந்த டோரண்டின் சிறப்பு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்கக்கூடும் சமீபத்தில் தான் நண்பர் ஒருவருக்கு மென்பொருள் அவசியம் ஏற்பட நான் அவரை டோரண்டில் தேடிப்பார்க்க சொல்லி வழிமுறைகளையும் சொன்னேன் அவரோ ரோரண்ட் பைலை கண்டுபிடித்ததாகவும் ஆனால் அளவு வெறும் 8கேபி மட்டுமே இருக்கிறது இதை எப்படி இன்ஸ்டால் செய்வது என கேட்கிறார் இத்தனைக்கும் தினம் கணினி உபயோகிப்பவர் தான்! சரி இதை பற்றி எழுதினால் நம் நண்பர்களுக்கும் உதவுமே என்கிற எண்ணமே இந்த பதிவின் நோக்கம்.
இந்த டோரண்டில் ஒரு சிறப்பு இருக்கிறது நீங்கள் கூகுளில் தேடிக்கிடைக்காத மென்பொருள், சினிமா, என எதை தேடினாலும் கிடைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது உதாரணத்துக்கு சொல்கிறேன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் எல்லோருக்கும் தெரியும் இதில் எத்தனை நபர்கள் ஒரிஜினல் பதிப்பை பயன்படுத்துகிறார்கள் மிகவும் குறைவானவர்களே ஆனால் பெரும்பாலனவர்களிடம் இயங்குதள குறுந்தகடு இருக்கும் ஆனால் அவை யாவும் நண்பர்களின் வழி வந்த்தாகவே இருக்கும் அவர்கள் கைக்கு எப்படி வந்தது அவர்கள் இயங்குதளத்தை கிராக் செய்தார்களா என்றால் நிச்சியமாய் இருக்காது ஏற்கனவே யாராவது கிராக் செய்து அப்லோட் செய்திருப்பார்கள் உண்மையை சொல்லப்போனால் ஒரிஜினல் இயங்குதளம் நிறுவும் போது சில கேள்விகள் எல்லாம் வரும் ஆனால் இந்த கிராக்கர்கள் எல்லாவற்றையும் தானாகவே நிறுவும் படி மாற்றி விடுவார்கள். இப்படித்தான் தமிழில் வெளிவந்த ஒரு பிரபல நடிகரின் படம் வெளிவந்த இரண்டாவது நாளிலேயே டோரண்டில் கிடைத்தது. சாதரணமாக புதிய படங்கள் எல்லாமே ஒன்றிரண்டு நாட்களில் டோரண்ட்களில் கிடைக்கும் பெரும்பாலனவை கணடாவிலிருந்து அப்லோட் செய்யப்படுகிறது என படித்த ஞாபகம் காரணம் அங்கு டோரண்ட் என்பது சட்ட விரோதமானது இல்லையாம்.
இனி நீங்கள் செய்யவேண்டியது டோரண்ட் கிளையண்ட்தரவிறக்கி கணினியில் நிறுவவும் அளவு வெறும் 300கேபிக்குள் தான். நிறுவி முடித்ததும் கீழிருக்கும் படத்தில் இருப்பது போல இருக்கும்.
இப்போது டோரண்டின் கிளையண்ட் உங்கள் கணினியில் நிறுவப்பட்டு விட்டது இனி டோரண்டில் நமக்கு தேவையானதை எப்படி தேடுவது என பார்க்கலாம். டோரண்டில் தேடுவதற்கு என்றே ஒரு தளம் இருக்கிறது Torrentz இங்கே சென்று நமக்கு வேண்டியதை தேடவும் நான் சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் படத்தின் ஒரிஜினல் பதிப்பான படத்தை ஆங்கிலத்தில் பார்த்தேன் இந்த படம் ரோபோக்களை பற்றியதாகும் அநேகமாக இந்த படத்தில் இருக்கும் காட்சியமைப்புகளும் மூலக்கருவும் ஓரே மாதிரியாகவே இருக்கிறது சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே. நமது இயக்குநர்கள் ஆங்கில படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என நினைப்பர்கள் போல என்ன செய்ய நாம் தான் ஆங்கிலமே புரியாவிட்டாலும் படம் பார்ப்போமே!
இனி நீங்கள் தேடிய பைல் கிடைத்ததும் அதில் இருக்கும் சீடர்ஸ் மற்றும் லீச்சர்ஸ் இரண்டையும் பாருங்கள் இதில் நீங்கள் முக்கியமாக கவணிக்க வேண்டியது சீடர்ஸ் எண்ணிக்கை சீடர்ஸ் எண்ணிக்கையை பொறுத்து உங்கள் தரவிறக்க வேகம் மாறுபடும் இந்த பைலைஅ பார்த்தீர்களா சீடர்ஸ் எண்ணிக்கை 42 இருக்கிறது லீச்சர்ஸ் எண்ணிக்கை 24 இருக்கிறது அதோடு Good என்பதாகவும் வாக்களித்திருக்கிறார்கள்.
இனி மேலே நான் அடையாளம் காண்பித்துள்ள பைலை கிளிக்கியது கீழிருக்கும் படத்தில் உள்ளது போல வேறு ஒரு விண்டோவிற்கு அழைத்துச்செல்லும் மேலே உள்ள படம் டோரண்டில் இருக்கிறதா என்பதை அறிய ஆனால் கீழிருக்கும் இந்த படம் எந்தெந்த தளங்களில் நாம் தேடிய தரவிறக்கம் டோரண்டாக கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி இங்கு கிளிக்குவதன் மூலம் நாம் பைல் கிடைக்கும் இடத்தை அடைந்து விடலாம்.
நான் BITSNOOP.COM தளத்திற்கு சென்றேன் இதில் பாருங்கள் படத்தின் பெயர் அதன் அளவு எத்தனை நாட்களுக்கு முன்பு அப்லோட் செய்யப்பட்டது பாசிட்டிவ் கருத்துக்கள், நெகட்டிவ் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வாக்கு என எல்லா தகவல்களும் கொடுத்திருக்கிறார்கள் இதைப்போலவே எல்லா தளங்களும் இருக்கும் என்பதில்லை ஒவ்வொரு தளங்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் அதை எல்லாம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.
இந்த BITSNOOP.COM தளத்தில் வலது பக்கம் பாருங்கள் ஒரு ஒரு அடையாளம் கொடுத்துள்ளேன் அது தான் நீங்கள் தரவிறக்க போகும் சினிமாவின் டோரண்ட் பைல் அதை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் அளவு அதிகபட்சம் 50-60 கேபி-க்குள் இருக்கும்.
இப்போது நீங்கள் சினிமாவின் டோரண்ட் பைல் தரவிறக்கி விட்டீர்கள் இனி நாம் முதலிலேயே டோரண்ட் கிளையண்டி கணினியில் நிறுவினோமே அதை திறந்து கீழிருக்கும் படத்தில் நான் அடையாளம் காண்பித்துள்ள Add என்பதை கிளிக்கி டோரண்ட் பைல் இருக்கும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்து விடுங்கள் அவ்வளவு தான், இப்படித்தால் Add செய்ய வேண்டுமென்பதில்லை நீங்கள் தரவிறக்கிய டோரண்ட் பைலை இருமுறை கிளிக்கினாலே நேரடியாக டோரண்ட் கிளையண்டிற்கு கொண்டு வந்துவிடும்.
இனி உங்கள் தரவிறக்கம் தொடங்கிவிடும் இதிலே எல்லாவற்றையும் காண்பிக்கும் உங்கள் தரவிறக்க வேகம், நீங்கள் அப்லோட் செய்யும் வேகம் என மொத்த தகவல்களையும் காண இயலும் இன்னும் இதில் நாம் பத்து பைல்களை இனைத்திருந்தால் எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எப்பொழுது அப்லோட் செய்ய அனுமதிக்கலாம் என நிறைய செட்டிங்ஸ் இருக்கிறது பதிவின் நீளம் போதுமான நேரமின்மை இப்படி எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இத்துடன் நிறைவு செய்கிறேன் சந்தேகம் இருப்பின் கேட்கலாம் முடிந்தவரை உதவுகிறேன் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தையும் மறக்க வேண்டாம் உங்களின் தரவிறக்கத்திற்கு இலவச நேரம் இருக்கிறதென்றால் அந்த நேரத்திலேயா டோரண்டில் தரவிறக்குங்கள் உங்களுக்கு அன்லிமிட்டட் இனைய இனைப்பு இருந்தால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment