'திருட்டு' எங்கும் திருட்டு, எதிலும் திருட்டு என்ற நிலைமை தான் இன்று, இந்த திருட்டு இணையத்தள பயன்பாட்டையும் விட்டு வைக்க வில்லை. அதிலும் குறிப்பாக இ மெயிலில் இருக்கும் தகவல்களை திருடுவது. நாம் முன்பெல்லாம் பிறந்தநாள் வாழ்த்தில் தொடங்கி அலுவலகம் சம்பந்தப்பட விசயங்களில் இருந்து நமது தனிப்பட்ட விஷயங்கள் வரை நாம் மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு கடிதம் எழுதுவதை தான் பழக்கமாக கொண்டு இருந்தோம். ஆனால், இப்போ கடிதம் என்று ஒன்று நடைமுறையில் உள்ளதா? என்று நினைக்கும் அளவுக்கு நாம் கடிதம் எழுதும் பழக்கத்தை மறந்து விட்டு எல்லாவற்றுக்கும் இ மெயில் அனுப்புவதையே பழக்கமாக கொண்டுள்ளோம் அப்படி நாம் அனுப்பும் இ மெயில்களில் நாம் அனுப்பும் தகவல்களை திருட்டு தனமாக படிக்கும் கும்பல்கள அதிகரித்துள்ளது. அதுவும் நமது அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களும் இவ்வாறு மற்றவர்களால் திருட்டுத்தனமாக படிக்கப்படும் பொது அதன் விளைவுகள் விபரீதமாகுவதும் உண்டு. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அடுத்தவன் மொத்தமாக அபகரித்தால்...? இதை போன்ற நிலைமை தான் இந்த தகவல் திருட்டாலும் ஏற்படுகிறது.
இந்த தகவல் திருட்டு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இ மெயில் மூலம் தகவல் பரிமாறப்படும் போது அதை இடைமறித்து படிக்கும் பல்வேறு மென்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. உங்களின் சர்வர் எவ்வளவு பாதுக்காப்பானதாக இருந்தாலும் உங்கள்
இ மெயிலை பெறுபவரின் சர்வர் பாதுக்காப்பில்லாமல் இருந்தால் போதும். அந்த சர்வரை இடைமறித்து படித்து விடுவார்கள். அட..., எப்படியும் படிக்கத்தான் செய்வாங்க என்றால் என்னத்தான் பண்ணுறது அதை முதலில் சொல்லுங்க என்று சொல்வது கேட்கிறது சரி சொல்கிறேன்.
முக்கிய தகவல்களை அனுப்பும் போது ரகசிய குறியீடுகளாக மாற்றி அனுப்பும் வசதி அதிகரித்து வருகின்றன. இதற்கென ஒரு இணையத்தளம் இருக்கிறது. அதற்க்கு நீங்க இங்கு சென்று பெறுநர் இ மெயில் முகவரியை அளித்து அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்ய வேண்டும் அதன் பிறகு சங்கேத வார்த்தையை அளித்தால் இ மெயில் தகவல் முழுவதும் சங்கேத குறியீடுகளாக மாற்றப்படும். அதன் பிறகு இ மெயில் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இ மெயிலை பெறும் நபருக்கு இ மெயில் மூலமோ, தொலைபேசி மூலமோ நாம் சங்கேத வார்த்தையை தெரியப்படுத்த வேண்டு. அப்போது இ மெயிலை பெற்றவர் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து, சங்கேத வார்த்தையை அளித்தால் ரகசிய குறியீடுகள் தகவல்களாக மாற்றப்[படும். இதனால் இ மெயிலை இடைமறித்து படிப்பவர்களுக்கு ரகசிய குறியீடுகள் மடுமே கிடைக்கும். இதனால் அவர்கள் செய்வது அறியாது பைத்தியம் போல தலையை சுவரில் முட்டிக்கொள்ள வேண்டியது தான். இதனால் நமது இ மெயில் பாதுக்காப்பாக சம்பந்தப்பட்டவரை சென்றடையும். நாமும் நமது இ மெயிலின் பாதுகாப்பு பற்றிய கவலை இன்றி இருக்கலாம்.
No comments:
Post a Comment