கூகுள் டாக்ஸ்-ல் இருக்கும் வீடியோ மற்றும் பேஸ்புக் வீடியோவை எந்த மென்பொருளும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக குவாலிட்டியுடன் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையத்தில் கிடைக்கும் அறிய பல வீடியோக்கள் பெரும்பாலும்
யூடியுப்,கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் தான் அதிகமாக
கிடைக்கின்றது இதில் உள்ள வீடியோக்களை நம் கணினியில்
சேமிப்பதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.savevid.com

உலகச் செய்திகள் முதல் அறிவியல் , கணினி பற்றிய உலகளாவிய
விளக்கங்கள் கொடுக்கும் வீடியோக்கள் , திரைபடங்கள் இன்னும்
பலவற்றை கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கும் கூகுள்,
யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இருக்கும்
வீடியோவை நம் கணினியில் எளிதாக சேமிக்கலாம். இந்ததளத்திற்கு
சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் எந்த தளத்தின்
வீடியோ சேமிக்க வேண்டுமோ அதை கொடுக்கவும் உதாரணமாக
நாம் கூகுள் வீடியோவின் முகவரியை கொடுத்துள்ளோம்.
url முகவரி கொடுத்து Download என்ற பொத்தானை அழுத்தியதும்
நமக்கு படம் 2-ல் காட்டியபடி எந்த பார்மட்-ல் தரவிரக்கம்
ஆகப்போகிறது என்பதையும் காட்டும் இப்போது FLV என்று
இருக்கும் ஐகானை சொடுக்கி நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
வீடியோவை தரவிரக்க விரும்பும் நண்பர்களுக்கு இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment