புரோகிராம்கள் அனைத்தையும் போர்ட்டபிள்
மெமரி சாதனத்திலும் எடுத்துச் செல்லலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, பயன்படுத்திப் பழக்கப்பட்ட புரோகிராம்களில் செயல்படுவதனையே விரும்புவார்கள். இதனால் தான் பெரும்பாலும், பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பணியாற்ற தேர்ந்தெடுப்பார்கள். நாம் பணியாற்றும் பிற கம்ப்யூட்டர்களில், நாம் விரும்பும் அனைத்து புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏன், எடுத்துச் செல்வது கூட சிரமமாக இருக்கும்.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் அனைத்து புரோகிராம்கள் மற்றும் புக்மார்க்குகள், புரோகிராம் அமைப்புகள், இமெயில் கிளையண்ட் புரோகிராம் அமைப்புகள் என அனைத்தையும் எடுத்துச் சென்று, எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படும் வகையில் ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வேறு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துகையில், நம் தனிநபர் தகவல்கள் எதுவும்,பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் களில் தங்காது என்பது இதன் சிறப்பு.
இந்த அப்ளிகேஷனை இந்த இணையத்தளத்தில் இலவசமாகக் கிடைக்கும். இந்த வசதி இரண்டு தொகுப்பாக PortableApps.com Suite and PortableApps Platform என்று கிடைக்கின்றன. இது முற்றிலும் இலவசம். சோதனைக் காலம்,அதன் பின் கட்டணம் என்று எதுவும் இல்லை. இதில் ஸ்பைவேர் எதுவும் இணைக்கப்படவில்லை. இதனை காப்பி செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.Portable Apps.com Suite என்பதில் நமக்குத் தேவைப்படும் இணைய பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் தொகுப்பு, காலண்டர்/ திட்டமிடுதல், இன்ஸ்டண்ட் மெசெஜ் அனுப்ப, ஆண்ட்டி வைரஸ், ஆடியோ பிளேயர், சுடோகு கேம்ஸ், பாஸ்வேர்ட் மேனேஜர், பிடிஎப் ரீடர்,பேக் அப் எடுக்க என அனைத்து பணிகளுக்கும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. மொஸில்லா பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், சன்பர்ட், க்ளாம் விண், பிட்ஜின், சுமத்ரா பிடிஎப், கீ பாஸ் பாஸ்வேர்ட், சுடோகு, மைன்ஸ் பெர்பக்ட் கேம், கூல் பிளேயர்,ஓப்பன் ஆபீஸ் / அபி வேர்ட் என அனைத்து வேலைகளுக்குமான புரோகிராம்கள் அனைத்தும் இதில் அடக்கம்.
இந்த தளத்தில் உள்ள சப்போர்ட் பிளாட்பார்மில், இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன் படுத்தும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
முதன் முதலில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான போர்ட்டபிள் அப்ளிகேஷனை உருவாக்கிய ஜான் டி ஹாலர், பின் படிப்படியாக, ஒருவரின் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து புரோகிராம்களையும் உருவாக்கி,இவ்வாறு முழுத் தொகுப்பாகக் கொடுத்துள்ளார். இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன் தொகுப்பினை பிளாஷ் ட்ரைவ், ஐபாட், மெமரி கார்ட், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் போன்ற எந்த போர்ட்டபிள் மெமரி சாதனத்திலும் எடுத்துச் செல்லலாம்.

No comments:
Post a Comment