புத்தம் புதிய profile தோற்றம்
இந்த படத்தினை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பல மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும். மேற்பக்கத்தில் விபரங்களை உள்ளடக்கிய பகுதி. மற்றும் எமது அண்மைய போட்டோக்கள்.
உங்களுக்கு பிடித்த நண்பர்கள்
உங்களுக்கு விருப்பமானவர்களை தொகுத்து உங்கள் ப்ரொஃபைலில் காட்டமுடியும். உதாரணமாக உங்கள் குடும்ப உறவுகள் , உங்கள் நெருங்கிய நண்பர்கள், உங்கள் நிறுவன ஊழியர்கள். இவ்வாறு குழுக்களை அமைத்து இந்த வசதியின் மூலம் காட்ட முடியும்.
உங்களுக்கும் நண்பருக்கும் இடையிலான தொடர்பு
உங்கள் நண்பர் ஒருவனின் ப்ரொஃபைல் க்கு சென்று அவருக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பினை அறியும் வசதியே இது. அந்த குறிப்பிட்ட நண்பரின் ப்ரொஃபைலின் வலது பக்கமூலையில் காட்டப்படும் பொட்டியில் இருவருக்கும் பொதுவான விடயங்களினை தோற்றுவிக்கப்படும்.
முழுமையான போட்டோ தொகுதி
இப்பொழுது உங்கள் அனைத்து போட்டோக்களையும் வீடியோக்களையும் ஒரே பார்வையில் பார்க்கும்வகையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த புதிய ப்ரொஃபைல் வசதியானது கட்டம் கட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் நீங்கள் விரும்புமிடத்து இந்த வசதியினே உடனேயே பெற்றுக் கொள்ளும் வசதியினை ஃபேஸ்புக் தந்துள்ளது.
No comments:
Post a Comment