Wednesday, December 1, 2010

யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்

இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும்
பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள நேரிடலாம் அந்த நேரத்தில் உங்கள் கோப்புகள் திறந்த வெளியில் இருக்குமானால் அதை யாரும் எளிதாக திறந்து பார்க்கலாம் அதே நேரத்தில் நாம் பெண் டிரைவை யாரிடமாவது கொடுக்கும் போது நாம் மறைத்துள்ள கோப்புகள் வெளியே தெரியக்கூடாது அதே நேரத்தில் மற்ற கோப்புகளை நாம் பகிர்ந்துகொள்ளவும் முடியும் அதற்காக நான் இரண்டு வித மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

முதலாவதாக SafeHouseExplorer இதை கணினியில் நிறுவி விடுங்கள் மிக எளிமையாக இருக்கிறது இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் நீங்கள் பார்ட்டிசியன் செய்து முடித்து கோப்புகளை மறைத்ததும் எப்போது நீங்கள் கணினியில் பெண் டிரைவை இனைக்கிறீர்களோ அப்போது இரண்டு பெண் டிரைவ் ஐகான் வந்திருக்கும் அதில் ஒன்று நாம் பார்ட்டிசியன் உருவாக்கியது இது எந்த கணினியில் இந்த மென்பொருளை நிறுவியிருக்கிறீர்களோ அந்த கணினியில் மட்டுமே இந்த பார்ட்டிசியன் தெரியும் அல்லாத கணினிகளில் இந்த பார்ட்டிசியன் வெளியே தெரியாது.



இரண்டாவதாக Remora USB File Guard இது கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதைப் பொருத்தவரை இப்படியான ஒரு பார்ட்டிசியன் இருப்பதை வெளியே காண்பிக்கும் ஆனால் அதை அவர்கள் அனுகி திறக்க முடியாது பயன்படுத்தி பாருங்கள் எது உங்கள் தேவையை சரியாக தீர்க்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் கோப்புகளை திறக்க முடியும் காரணம் இதற்கான நிறுவல் உங்கள் யுஎஸ்பியில் தான் நிறுவுகிறீர்கள் ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது நாம் நமது கோப்புகளை திறக்க ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்தும் கணினியில் எக்ஸ்ட்ராக்ட் செய்யவேண்டி வரும் அதை கவணமாக அழித்துவிடுங்கள் இல்லையென்றால் நீங்கள் பாதுக்காப்பாக வைக்க நினைத்த கோப்புகள் மற்றவர்கள் காணக்கூடும்.



மேலும் தங்களின் உபயோகத்திற்காக இன்னும் இரண்டு வகையான மென்பொருளையும் உங்கள் கவணத்திற்கு தருகிறேன் ஆனால் இந்த இரண்டு மென்பொருளும் எதை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் எனபதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இனி USB True crypt மற்றும் USB True crypt இரண்டையும் சோதித்து பார்க்க விரும்பும் நபர்கள் முயற்சித்து பாருங்கள் அது பற்றியதான தகவலை நம் தளத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment