Thursday, December 2, 2010

உங்கள் பேஸ்புக் கணக்கினை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் அப்ளிகேஷன்

பேஸ்புக் இணைய தளத்தின் பாவனையாளர்களுக்கு BitDefender மென்பொருள் நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேசனினை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேசனின் பெயர் SafeGo என்பதாகும். இந்த அப்ளிகேசனை உங்கள் பேஸ்புக் கணக்கில் நிறுவுவதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் பாதுகாப்புத்தன்மையினை உறுதி செய்து கொள்ளல்லாம்.


இந்த SafeGo அப்ளிகேஷனானது உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் பகிரும் விடயங்கள் மற்றும் இன்பொக்ஸ் போன்றவற்றினை ஸ்கான் செய்து பாதுகாப்பற்ற விடயங்களை நீக்கும் செயற்திறன் கொண்டது.

SafeGo அப்ளிகேஷனின் காணப்படும் மற்றுமொரு வசதி என்னவென்றால் இது எங்கள் ப்ரைவசி செட்டிங்க்ஸ்களை ஸ்கான் செய்து எமது ஃபேஸ்புக் ப்ரைவசி தொடர்பான அறிக்கையினையும் தரவல்லது. புதிதாக ஃபேஸ்புக் பாவிப்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த அப்ளிகேசன் தற்போதைக்கு இலவசமாகவே BitDefender நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தாராளமாக நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கினை இப்போதே ஸ்கான் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment