அலுவலகத்தில் உருப்படியாக ஆணி பிடுங்காமல், அலுவல் சம்பந்தப்படாத வலைப்பக்கங்களில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்களா?.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள்? உலாவியை முழுமையாக மூடிவிடலாம் என்றால், பல டேப்களில் தேடிப்பிடித்த வலைப்பக்கங்கள் இருக்கும். இவையனைத்தையும் மறுபடியும் பிறிதொரு சமயத்தில் வேண்டும் என வைத்துக் கொண்டால், இந்த சூழ்நிலையில் டக்கென்று எஸ்கேப் ஆவது எப்படி?
இதோ கூகுள் க்ரோம் உலாவிக்கான PanicButton நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Install பொத்தானை அழுத்தி இதை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, டூல்பாரில் Panic Button ஐகான் வந்திருப்பதை கவனிக்கலாம்.
இதற்கு மேல், நீங்கள் இணையத்தில் உங்கள் மேலதிகாரி விரும்பாத வலைப்பக்கங்களை பல டேப்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென அவர் வரும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், நீங்கள் திறந்து வைத்துள்ள வலைப்பக்க டேப்களின் விவரங்கள் வெளியில் தெரியாத ஒரு புக் மார்க்காக உருவாக்கப்பட்டு (ஓரிரு வினாடிகளில்) முழுவதுமாக மறைக்கப்படும்.
எத்தனை டேப்கள் இப்படி மறைக்கப்பட்டுள்ளன என்பதை, இந்த PanicButton ஐகானில் தோன்றும் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
மறுபடியும் இவற்றை திறக்க, இதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது. எஸ்கேப்பு..
ஒருவேளை அதேநாளில், மறுபடியும் அந்த வலைப்பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது எனும் பட்சத்தில் இந்த பக்கங்களை நீக்க, டூல்பாரில் உள்ள டூல்ஸ் பட்டனை அழுத்தி Bookmark Manager க்ளிக் செய்து,
திறக்கும் திரையில் இடது புற பேனில், Other bookmarks இற்கு அடுத்துள்ள Temporary Panic ஃபோல்டரை வலது க்ளிக் செய்து, Delete செய்தால் போதுமானது.
(இது போன்று, உலாவிகள் மட்டுமின்றி பிற பயன்பாடுகளிலிருந்தும் எஸ்கேப் ஆவது எப்படி என்ற எனது மற்றொரு இடுகையை பாருங்கள்..Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?)
No comments:
Post a Comment