Friday, December 3, 2010

நமது பழைய மென்பொருள்களுக்கு புதிய மென்பொருள் வேண்டுமா?




இதை கண்டிப்பா படிங்க, ஓட்டு போடவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஏன் என்றால் இது ரெம்ப பயனுள்ளது. எனக்கு இதற்கு தலைப்பு என்ன போட்டு உங்களை படிக்கவைத்து பயன்பெற வைக்கலாம், என்று யோசிக்கவே நிமிடம் ஆச்சுங்க.
புதிது புதிதாக எப்.எம் சானல்கள், டிஜிட்டல் தொழில்நுற்பம் வந்துவிட்டது. ஆனால் சிலர் பழைய வானொலி பெட்டியை வைத்துகொண்டு 'கோர' 'கோர'சத்தத்துடன் பாடல் கேட்டுகொண்டே இருப்பார்கள்.
சில சமயம் கணினி வைத்திருப்பவர்களும் இப்படித்தான் இருக்கின்றனர். இலவசமாக எத்தனையோ மென்பொருட்கள் வந்து விட்டாலும், இன்னும் அரதப் பழசான மென்பொருட்களையே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். தங்களது கணியில் இருக்கும் மென்பொருள் பழைய வடிவமா? அல்லது புதிய வடிவமா? என்று கூட தெரியாதவர்களும் உண்டு. இதனால் எளிமையாக அவர்களின் கணினிகள் வைரஸ்கள் மற்றும் ஸ்பாம் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென்றே ஒரு இணையத்தளம் உள்ளது.
அதற்கு நீங்கள் இங்கு சென்று இந்த இணையத்தளம் தரும் இலவச மென்பொருளை டவுன்லோடு செய்து, கணினியில் இயக்கினால், நமது கணினி முழுவதையும் ஆய்வு செய்து நமது கணினியில் பழைய மென்பொருட்கள் என்னென்ன உள்ளது என்பதை தெரிவிக்கும். வீடியோ டிரைவ்கள், ஜாவா,அடோப் போன்ற அனைத்து விதமான மென்பொருட்கள், சாட்டிங் ப்ரோகிராம்கள் என அனைத்து விதமான மென்பொருட்களின் தகவலையும் பெறலாம். அது மட்டுமல்லாமல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு வசதியையும் அளிக்கிறது. ஆம், நமது பழைய மென்பொருளின் தற்போதைய புதிய வெர்சனையும் இலவசமாக டவுன்லோடு செய்யும் வசதியையும் அளிக்கிறது. Microsoft.Net Framework2.0 வசதி இல்லாத கணினிகளில் அதை இலவசமாக டவுன்லோடு செய்த பிறகு, இந்த இணையத்தளத்தின் வசதியை பயன் படுத்த முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியை இதுபோன்ற சோதனை செய்து புதிய மென்பொருட்களின் வடிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment