Thursday, December 23, 2010

தற்காலிக இ-மெயில் முகவரிக்கு...



இணையத்தள உலகில் நமக்கு தொந்தரவான விசயங்களில் ஒன்று ஸ்பாம் மெயில்கள். இவர்களுக்கு எங்கிருந்து தான் நமது இ-மெயில் முகவரி கிடைத்ததோ என்று நாமே குழம்பி போகும் அளவுக்கு இவர்களின் தொந்தரவு தாங்க முடியலப்பா.   இந்த ஸ்பாம் மெயில்களை தடுக்க நாம் எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. ஆனால் இதற்கென ஒரு இணையத்தளம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் இந்த இணையத்தளத்திற்கு சென்றால் நமக்கென ஒரு தற்காலிக இ-மெயில் முகவரியை அளிப்பார்கள் அதன் மூலம் நாம் நமது ஸ்பாம் மெயில்களை முழுவதுமாக கட்டுப்படுத்தலாம்.


அதற்குhttp://sedoparking.com/2prong.com  என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்றால் வலது புறம் உச்சியில் தற்காலிக டொமைன் முகவரி அளிக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு ஒரு நொடியில் நமக்கென தனி இ-மெயில் முகவரியைப் பெறலாம். உதாரணமாக kumar@whitepimp.com என்ற முகவரி நமக்கு அளிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். நமது URL முகவரி www.2prong.com/kumar என அளிக்கப்படும். நமக்கென தனி இ-மெயில் ஐ.டி, பாஸ்வேர்டு எல்லாம் கிடையாது . இந்த URL முகவரியை டைப் செய்தால் போதும். நமது இ-மெயில் முகவரிக்கு  வந்துள்ள அனைத்து இ-மெயில்களையும் படிக்கலாம். வாரம் ஒரு முறை டொமைன் மாற்றப்படும், நமது முகவரியும் அளிக்கப்படும். இதனால் ஸ்பாமர்கள் குழம்பி கும்மியடிப்பார்கள்.
நாம் நமது தற்காலிக முகவரியை நமக்கு அறிமுகம் இல்லாத இணையத்தளங்களுக்கு கூட அளிக்கலாம் , அது தான் ஒரு வாரத்தில மாறிடும்ல அந்த தைரியத்துல தான்

No comments:

Post a Comment