Monday, December 6, 2010

இரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்

பலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.

நாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம்.

Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.


இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில்User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computerஎன்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள்.


இனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களைRestrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான்! நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும்.


மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disableக்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில் செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்)

No comments:

Post a Comment