ஆயிரம் கோடிக்கும் மேலான இணையத்தளப் பக்ககங்களை எளிதாக தேட உதவும்'கூகுள்' தேடல் இயந்திரம், நீங்கள் குறிப்பாக தேட விரும்புவதை மிகச் சரியாக உங்களுக்கு தேடிக் கொடுப்பதற்காக பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்ட தேடலுக்கான தலைப்பை நீங்கள் 'க்ளிக்'செய்தால் போதும் அவற்றின் விவரம் இதோ...
Book Seach - புத்தகங்களின் முழு உரைநடைப் பகுதியையும் அறிய இது உதவுகிறது.
Cached Links - ஒவ்வொரு பக்கத்தின் சிறப்பு, மாதிரி வடிவத்தை இது காட்டுகிறது.
Calculatar - கணக்குகள் கணித சமன்பாடுகளைக் கணக்கிட இது உதவுகிறது.
Definitions - பல்வேறு 'ஆன்லைன்' மூலங்கள் மூலம் திரட்டப்பட்ட தொழில்நுற்பச் சொற்களுக்கான விளக்கங்களை தருகிறது.
File Types - பி.டி.எப் (PDF) டாக்குமென்டுகள் உள்ளிட்ட நான் எச்.டி.எம்.எல் (non HTML) பைல் அமைப்புகளை தேட இது உதவுகிறது.
Films - திரைப்பட விமர்சனங்கள் மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதி அருகில் உள்ள பகுதியில் திரையிடப்பட்டுள்ள படங்கள் பற்றிய விவரங்களை தருகிறது.
I'm Feeling Lucky - உங்கள் தேடலில் முதலில் இடம்பெற்றுள்ள இணையத்தளப் பக்கத்திற்கு உங்களை நேரடியாக அழைத்து செல்கிறது.
Images - வழக்கமான இணையத்தள தேடலின் போது அது தொடர்பான படங்களை காண உதவுகிறது.
Local Serch - அமெரிக்கா, இங்கிலாந்த், கனடா நாடுகளில் குறிப்பிட்ட உள்ளூர்ப் பகுதி தொழில்கள் மற்றும் சேவைகளை பற்றிய விவரங்களை அறிய உதவுகிறது.
News Headlines - உங்கள் தேடுதல் முடிவுகளுடன், அது தொடர்பான புதிய செய்தி விவரங்களைத் தெரிவிக்கிறது.
Phone Pook - அமெரிக்காவின் தெரு விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எங்களை அறிய உதவுகிறது.
Product Search - 'ஆன்லைனில்' விற்பனையாகும் பொருட்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் அறியலாம்.
Q&A - நேரடியான கேள்விகளுக்கு உடனடி பதில்களை அறிய இது உதவுகிறது.
Search By Number - குறிப்பிட்ட சேவைகளுக்கு உரிய எண்களின் மூலம் அவை பற்றிய விவரங்களை நேரடியாக அறியலாம். மேலும் அமெரிக்க காப்புரிமைகள் மற்றும் பல்வேறுபட்ட தகவல்தள விவரங்களை அறியலாம்.
Similar Pages - குறிப்பிட்ட தேடல் முடிவுடன் தொடர்புடைய பக்கங்கள் காட்டப்படும்.
Site Search - உங்கள் தேடலை ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்துடன் கட்டுப்படுத்தும்.
Spell Checker - உங்கள் தேடல் வார்த்தை தொடர்புடைய பல்வேறு வார்த்தை எழுத்துக்களை இது எடுத்துக்காட்டும்.
Stock Quotes - பங்கு மற்றும் 'மியூச்சுவல் பண்ட்' தொடர்பான விவரங்களை அறிய இதைப் பயபடுத்தலாம்.
Street Maps - அமெரிக்க தெரு வரைப்பட விவரங்களை இது உங்களுக்கு காட்டுகிறது.
Travel Information - அமெரிக்காவில் உள்ள ஒரு விமான நிறுவன விமானத்தின் வருகை, புறப்பாடு நிலை, விமான தாமதம் மற்றும் காலநிலை விவரங்களை அறிய இது உதவுகிறது.
Weather - அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளின் நடப்பு காலநிலையையும், அடுத்த காலநிலை எப்படி இருக்க கூடும் என்பதையும் அறிய இந்த வசதி வளிகாட்டுகிறது.
Web Page Translation - ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு ஆங்கிலம் அல்லாத பிறமொழி இணையத்தள பக்கங்களின் விவரங்களை அறிய இது உதவுகிறது.
Who Link TO You - குறிப்பிட்ட URL- க்கு உட்பட்ட பக்கங்களை எடுத்துக் காட்டுகிறது.
No comments:
Post a Comment