Thursday, December 23, 2010

காதல் இ மெயில் அனுப்புபவர்கள் உங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அனுப்பலாம் வாங்க



காதல் கடிதம் எழுதுபவர்களாக இருந்தாலும் சரி காதல் இ மெயில் அனுப்புபவர்களாக இருந்தாலும் சரி வித்தியாசமாக அனுப்பி காதலியை கவரவே நினைப்பார்கள். இப்படி பட்டவர்களை குஷிப்படுத்தும் இணையத்தளம் தான் இது.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்" என்று பேனாவால் எழுதும் காதல் கடிதத்தில் அடித்தல் திருத்தல் இருக்கும் , ஆனால் இ மெயிலில் காதல் கடிதங்கள் எழுதும் போது இதை போன்று அடித்தல் திருத்தல் இருக்காது . பொதுவாக நாம் இ மெயில் செய்தியை டைப் செய்யும் போது பிழையை திருத்துவதும், நாம் எழுதியதை மாற்றுவதும் எளிது. நாம் முதலில் என்ன டைப் செய்தோம் பிறகு என்ன மாற்றம் செய்தோம் என்பது எழுதியவருக்கு தெரியாது. தொழில் சம்பந்தமான இ மெயில்களுக்கு பிழை இல்லாத இ மெயில்கள் அவசியம் . ஆனால் காதல் கடிதம் எழுதுவதோ, நெருங்கிய நண்பருக்கு அன்யோன்யமாக கடிதம் எழுதும்போதோ இப்படி எழுதினால் சுவாரசியமாக இருக்காது.
மானே! என்று எழுதி அதை திருத்தி, தேனே! என்று எழுதி மீண்டும் அதனையும் திருத்தி மயிலே ! என்று எழுதினால் தான் அது காதல்  கடிதம் (அப்போ தானே காதலியும் ' ஆகா, நம் மேல இவ்ளோ பாசமா'ன்னு நினைபாங்க ) . இன்றைய இ மெயில் யுகத்தில் காதல் கடிதங்களும் இ மெயிலிலேயே அனுப்புவதால், இ மெயிலில் காதல் கடிதங்களை படிப்பவர்கள் இந்த அனுபவத்தை பெற முடியாமல் போகிறது . இந்த சிக்கலை போக்கி நாம் என்ன டைப் செய்தோம்? என்ன திருத்தம் செய்தோம் என்பதை ? அப்படியே படிப்பவருக்கு காட்டும் வசதியை இந்த இணையத்தளம் வழங்கிகிறது.
நீங்கள் http://www.fuzzmail.org/  என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது பெயர் , இ மெயில் முகவரியை அளித்து, பெறுபவரின் பெயர் மற்றும் இ மெயில் முகவரியை அளித்து, உங்கள் காதலிக்கு அல்லது காதலனுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கடிதத்தை டைப் செய்யுங்கள்.உறுப்பினராக வேண்டிய அவசியமே இல்லை (உறுப்பினர் ஆக வேண்டும் என்றாலும் நமக்கு தான் கவலையே இலையே அதுக்கு தான் நான் ஏற்கனவே உறுப்பினராகமலே எந்த இணையத்தளத்திலும் நுழைவதற்கான வழியை சொல்லிடேனே ) நாம் டைப் செய்ய ஆரம்பித்த உடன் அதை அப்படியே பதிவு செய்து கொள்வார்கள்.அதனை பெறுபவரின் முகவரிக்கு லிங்காக அனுப்பி வைப்பார்கள். அந்த லிங்கை பெறுபவர் க்ளிக் செய்தால் நாம் டைப் செய்த நிகழ்வுகளை அப்படியே ரீ-பிளேயாக அப்படியே காட்டும் . நாம் முதலில் டைப் செய்த வார்த்தை அதை எப்படி எல்லாம் மாற்றினோம் என்பதை எல்லாம் அப்படியேஉங்கள் காதலி அல்லது காதலன் அப்படியே பார்க்கலாம். இதனால் படிப்பவருக்கு சுவாரசியம் கூடும். காதல் இ மெயில் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும் அல்லவா? ஆனால், காதலியை திட்டி எழுதி விட்டு  பிறகு திருத்துபவர்கள் வகையாய் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பது கொஞ்சம் பரிதாபமான விஷயம் தான் இல்லையா. ....

நான் வேண்டும் என்றே தப்பு தப்பா டைப் பண்ணி என் காதலிக்கு இ மெயில்ல காதல் கடிதம் அனுப்பி கவிழ்க்கஆரம்பிச்சிட்டேன் நீங்களும் தொடங்குங்கங்கபா ... மாட்டிகாதீங்கோ...

No comments:

Post a Comment