Saturday, December 11, 2010

பாடங்களை ஆடியோ வடிவில் மாற்றி படிக்கலாம் வாங்க...




நாம்மில் பலரிடம் கடினமான வேலை எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு படிப்பது தான் என்று சொல்வார்கள். நாம் படிப்பதற்கு அந்த அளவுக்கு கஷ்டப்படுகிறோம் ஏதோ பெரிய வேலையை செய்வதை போன்று!. யாரோ ஒரு பெரியவர் இப்படி சொன்னதாக நினைவு ' மாணவர்கள் ஏன் பாடபுத்தகங்களை படிப்பதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி பாடங்கள் இருந்தால் படிபார்களேஎன்ற கேள்விக்கு அந்த பெரியவர் சொல்கிறார் " மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களில் இருக்கும் படங்கள் பிடிக்கவில்லைஅதனால் படிப்பதை வெறுக்கிறார்கள்என்று இல்லை. மாணவர்களுக்கு படிக்க தான் பிடிக்க வில்லையே தவிர பாடங்களை அல்ல. அவர்களுக்கு திரைப்படத்தை பாடமாக வைத்தாலும் அவர்கள் படிக்க மாட்டார்கள். அவர்களது பிரச்சனையே படிப்பதில் தானே தவிர படிக்கும் பாடங்களில் அல்ல" என்று பதில் அளித்து இருந்தார். அவர் சொல்வதும் சரித்தான் இல்லையா ? வீட்டில் படிக்கும் நேரம் வந்தால் போதும் அம்மா, அப்பாவிடம் இருந்து 'திட்டு' விழும் 'படிடா'என்று அதையெல்லாம் சமாளித்து ஒரு வழியாக நாம் படிப்பதற்கு
நேரம் ஒதுக்க வேண்டும், நமக்கு இருக்கும் பிசியில் நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம். அதன் பிறகு படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுத்தால் அதுவரைக்கும் வராத தூக்கம் அந்த நேரம் பார்த்து வரும். இப்படி பல சோதனைகள் நாம் படித்து முடிப்பதற்குள் வந்து சேரும் இதெல்லாம் சமாளித்து படித்து முடிப்பதற்குள் பொதும் பொதும் என்றாகி விடுகிறது தானேஇன்னும் நாம் படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டாம். ஆம்,நாம் படிக்கவேண்டிய பாடங்களை பேச்சு வடிவில் மாற்றி தருவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது.  
எம்.எஸ்.வேர்டுபி.டி.எப் பையில்கள்பவர் பாயிண்ட் பையில்கள்,இணையத்தளப் பக்கங்கள்இமெயில்கள் போன்ற அனைத்துவிதமான பையில்களையும் அதில் எப்படி இருக்கிறதோ அப்படியே பேச்சு வடிவில் மாற்றி தருகிறார்கள் . அதற்கு நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக இந்த இணையத்தளத்தில் உறுப்பினராகி நமக்கு ஆடியோ வடிவில் தேவைப்படும் பையில்களை அதாவது எழுத்து வடிவில் உள்ள பையில்களை கொடுத்து அதற்கான மொழியை தேர்வு செய்து நமக்கு ஆண் குரலில் வேண்டும் என்றால் ஆண் குரலிலும் பெண் குரலில் வேண்டும் என்றால் பெண் குரலையோ தேர்வு செய்து எழுத்து வடிவல் உள்ளவற்றை ஆடியோ வடிவில் அப்படியே மாற்றி பெற்று கொள்ளலாம். அதனை நாம் நமது ஐபாட்களில் டவுண்லோடு செய்து கொள்ளலாம் அல்லது mp3வடிவிலும் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை நாம் நமக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ஒலிக்க செய்து கேட்டு மனதில் நிறுத்தி கொள்ளலாம். பக்கம் பக்கமாக கண்விழித்து படிக்க விரும்பாதவர்கள் இந்த வசதியை வயன்படுத்தி செவி வழியாக கேட்டு பாடம் படிக்கலாம். கதைகளை கூட இப்படி படிக்கலாம் இல்லையா?. எப்படி இந்த வசதியை பயன்படுத்துவது என்ற வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  



No comments:

Post a Comment