Saturday, December 11, 2010

ஆடியோ பைல்களை நமக்கு தேவையான அளவிற்கு வெட்டி ரிங்டோனாக உபயோகிக்க..


போன் இல்லாத நபரே இல்லை என்ற நிலையை நோக்கி நம் நாடு வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை/ கூலி தொழிலாளி முதல் நம் நாட்டு ஜனாதிபதி வரை/ பள்ளி படிக்கும் சிறுவர் முதல் IAS படிக்கும் அனைவரிடமும் இந்த செல்மோகம் பரவி விட்டது. இதில் நமக்கு விருப்படி ரிங்க்டோன் வைத்து மகிழ்வோம். நாம் முழு பாடலையும் ரிங்க்டோன் ஆக செட் செய்யும் வசதி இருந்தாலும் இப்படி செட் செய்யும் போது நமக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் அந்த பாடலில் உள்ள இசை முதலில் வந்து அடுத்து பாட்டு வருவதற்குள் அந்த அழைப்பு துண்டிக்கப்படும். மற்றும் நமக்கு தேவையான பகுதியை மட்டும் ஒலிக்க செய்ய முடியாது. ஆகவே நாம் எப்படி முழு பாடலில் இருந்து நமக்கு தேவையான பகுதியை பட்டும் வெட்டுவது என பார்ப்போம்.


இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • நிறுவியதும் டெஸ்க்டாப் பகுதியில் வரும் shotcut பட்டனை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • முதலில் open என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் ஆடியோ பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாடலை தேர்வு செய்ததும் அந்த பாடல் ஒலிக்க தொடங்கும்.
  • அங்கு உங்களுக்கு தேவையான இடத்தில் இந்த Scrol பட்டனை நகர்த்தி உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து Set start என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு தேவைப்படும் இடம் வரை வந்தவுடன் End Start என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பகுதி கட் ஆகி விட்டது. இப்பொழுது Play Selection என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த பகுதி மட்டும் ப்ளே ஆகும். நீங்கள் தேர்வு செய்த பகுதி திருப்தியாக இருந்தால் Save Selection என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த பகுதி மட்டும் உங்கள் கணினியில் சேமிக்க படும்.
  • தேர்வு செய்த பகுதி திருப்தியாக இல்லை என நினைத்தால் New Selection என்ற பட்டனை அழுத்தி வேறு இடத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்பதேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த பட்டனை அழுத்தவும்.


இனி உங்கள் இஷ்ட்டம் போல ஆடியோ பைல்களை கட் செய்து ரிங்க்டோனாக வைத்து கொண்டு பந்தா காட்டலாம்.

No comments:

Post a Comment