Thursday, December 2, 2010

அறிமுகமாகிறது Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்

கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பானGoogle Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.

இந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.

முப்பரிமாண மரங்கள் : இந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.

3D tree

உடன் இணைக்கப்பட்ட Street view : கூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.

streetview

வரலாற்று புகைப்படங்கள் : கூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.

இவ்வாறு பல வசதிகளை கூகிள் ஏர்த் 6 கொண்டுவந்துள்ளது. நான் கூறியது தெளிவில்லையாயின் இந்த வீடியோவினை பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment