Monday, December 6, 2010

Windows 7 -ல் Recovery Disc ஐ நீங்களே உருவாக்கலாம்

நமது கணினிகளில் சில சமயங்களில் இயங்குதளம் பூட் ஆகாமல் போவதும், நமது முக்கியமான டேட்டாக்கள் உள்ளே இருக்கிறதே என்ன செய்வது? என டென்ஷன் ஆவதும் வாடிக்கைதான்.

சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள், நாம் கடைசியாக நிறுவிய மென்பொருளால் கூட ஏற்பட்டிருக்கலாம். சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கு கூட விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே சென்றுதான் செய்ய முடியும். இதோ உங்களுக்காக ஒரு எளிய முறையில் விண்டோஸ் 7 இயங்குதளம் உள்ள கணினிக்கு ரிப்பேர் டிஸ்க் ஐ நீங்களாகவே எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.


விண்டோஸ் 7 சர்ச் பாக்ஸில் system repair disc என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இந்த ரிப்பேர் டிஸ்க் ஐ உருவாக்க வெறும் 142 MB போதுமானது என்பதால், ஒரு Blank CD ஐ உபயோகித்தால் போதுமானது.

அடுத்து திறக்கும் Create a System Repair Disc வசனப் பெட்டியில் உங்கள் CD/DVD writer இன் ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Create Disc பொத்தானை அழுத்தி recovery disc ஐ உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இனி எப்பொழுதாவது உங்கள் கணினியில் ஏதாவது பிரச்சனை உருவாகி பூட் ஆகாமல் போனால் இந்த Recovery Disc ஐ உபயோகித்து பூட் செய்து Windows Setup [EMS Enabled] என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இனி வரும் system recovery options வசனப் பெட்டியில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து உங்கள் கணினியை நீங்களே சரி செய்து கொள்ளலாம்.

எப்பொழுதுமே கணினி நல்ல நிலையில் வேலை செய்யும் பொழுது System Image ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment