வேலன்-டெக்ஸ்டாப்பை ரீ-நேம் செய்ய
எதெதெற்கோ பெயர் வைக்கின்றார்கள். நாம் நமது டெக்ஸ்டாப்பில் உள்ள போல்டருக்கு நமக்கு விருப்பமான பெயர்களை வைக்கலாம்.ரைட் கிளிக் செய்து பெயரை சுலபமாக மாற்றலாம் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.ரீ -சைக்கிள் பின்னை ரைட் கிளிக்செய்து பாருங்கள். உங்களுக்கு ரீ-நேம் ஆப்ஷனே இருக்காது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
150 கே.பி அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ரீ-சைக்கிள் பின்.மை கம்யூட்டர்.மை டாக்குமெனட்,மை நெட்ஓர்க் பிளேசஸ் என எதை வேண்டுமானாலும் பெயரை மாற்றி ஓ,கே.தரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ரீ -சைக்கிள் பின்னின் பெயரை மை டார்லிங் என் பெயர் மாற்றிஉள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment