Wednesday, December 1, 2010

நமது மொபைல் போன்களுக்கான இலவச தரவிறக்க தளங்கள் (Mobile Phone - Free Download Sites)


மது மொபைல் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளவும் மொபைல்க்கு தேவையான
  • வால்பேப்பர்கள் (wallpapers)
  • கேம்ஸ் (Games),
  • வீடியோக்கள் (Videos)
  • மென்பொருட்கள் (Softwars)
  • ரிங்டோன்கள் (RingTones)
  • தீம்ஸ் (Themes)
என்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன.
இருந்தாலும் பலருக்கு இது தெரிவது இல்லை. பலர் பணம் செலவழித்து கடைகளில் கொடுத்து பெற்று கொள்ளுகின்றனர்.நாம் இவற்றை வீட்டில் இருந்தபடியே தரவிறக்கம் செய்து பயன் படுத்திகொள்ளலாம். எந்த தளங்கள் சிறப்பான தளங்கள் என்றும்.இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.




முதலாவதாக நீங்கள் ஒரு மொபைல் வாங்க ஐடியா ஒன்னு இருந்தா என்ன போன் வாங்கலாம் என்ற குழப்பமா உங்களுக்கு தேவையான மொபைல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுவதில் சிரமமாக உள்ளதா எல்லாவற்றுக்கும் தீர்வாக இத் தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் எல்லா வகையான மொபைல் போன்கள் பற்றிய தகவல்களயும் பெற்று கொள்ளும் அதே வேளை ஒப்பிட்டும் கண்டறியலாம்.இது புதிதாக மொபைல் போன் வங்குபவர்களுக்கான மிகவும் பயன் உள்ள தளம் ஆகும்.


முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென் பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம். மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்குகின்றது.எல்லா வகையான தரவிறக்கங்களும் கிடைக்கும் இடம்.


முன்பு www.nokia.mosh.com என்ற பெயரில் தனது கைப்பேசி பாவனையாளர்களுக்கு இலவச கைப்பேசி தரவிறக்க தளத்தை நடத்தி வந்த நோக்கியா நிறுவனம் அதில் பாவனையாளர்கள் மூலமாக மற்றவர்களுக்கு சட்ட விரோத மென்பொருட்களும் சேர்ந்து சென்றடைந்ததால் அந்த தளத்தை மூடியது.பின்பு ஆப்பிள் ஐ-போன் ஸ்டோருக்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் ஆரம்பித்த தளம் தான் இந்த தளம்.இங்கே நோக்கியா போன்களுக்கான எல்லாவற்றையும் இலவசமாகவும் தேவைப்பட்ட மென்பொருட்களுக்கு காசு கொடுத்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நமதுகைப்பேசிக்குதேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் மென் பொருட்கள்என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.


ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.


ஐபோன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.
அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.


இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.


ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நன்றி இணையம்

No comments:

Post a Comment