Sunday, December 26, 2010

செல்போன் தகவல்களை சேமிக்கலாம்



முன்பொரு காலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த செல்போன்கள் இன்று ஏராளமான செயல்களை செய்ய உதவுகிறது. வீடியோஆடியோ,எஸ்.எம்.எஸ் என செல்போன் செயல்பாடு விரிவடைந்துள்ளது. இப்படி கையடக்க களஞ்சியமாக செல்போன் மாறிவிட்டது. ஆனால் செல்போன் தொலைந்து போனாலோதிடீரென இயங்காமல் போனாலோ ஏற்படும் இழப்புகளும் ஏராளம். செல்போனில் சேமித்து வைத்திருக்க கூடிய தொலைபேசி எண்கள் முதல் வீடியோ வரை அனைத்தும் அழிந்து விடும். இதனால் தொழில் தொடர்பான நபர்கள் முதல் சொந்தகாரர்கள் வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியாது திண்டாட நேரிடும். செல்போனில் இருக்கும் தகவல்களை இன்னொரு பிரதி எடுத்து வைத்திருந்தால் மட்டுமே இது போன்ற இழப்புகளில் இருந்து தப்ப முடியும்.
நமது செபோனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை இந்த இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலான செல்போன்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியும். இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு செய்துநமது செல்போன் எண்ணையும் அளிக்க வேண்டும். உடனே நமது செல்போனுக்கு சங்கேத எண்ணை அனுப்பி வைப்பார்கள். அதனை அடிப்படையாக கொண்டு நாம் நமது புதிய கணக்கை தொடங்கலாம். புதிய கணக்கை தொடங்கும் பொது நமது செபோனுக்கு அவர்களுடைய புரோகிராமை அனுப்பி வைப்பார்கள். இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றிபுரோகிராமை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள்வீடியோக்கள்,  ஆடியோக்கள் அனைத்தும் ஆன்லைனில் சேமித்து வைக்கப்படும்.  நமது செல்போன்கள் தொலைந்து போனால் கூட புதிய செல்போனிற்கு அனைத்து தகவல்களையும் கொண்டு வர முடியும். இந்த சேவையை அந்த இணையத்தளம் இலவசமாக அளிக்கிறது. செல்போனே கதி என்று வாழ்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய சேவை இது.

No comments:

Post a Comment