Saturday, December 25, 2010

Gmail Password திருட்டை தடுக்க......

நம் இமெயிலின் கடவுச்சொல் மறந்துவிட்டது என்றால் உடனடியாக
ஜீமெயிலில் சென்று கடவுச்சொல் மறந்துவிட்டது என்று கூறினால்
போதும் நம் அலைபேசிக்கு ஜீமெயில் இருந்து கோடு ஒன்றை
அனுப்பி விடுகின்றனர். இதில் வரும் கோடை பயன்படுத்தி புதிய
கடவுச்சொல்லை உருவாக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான்
இந்தப் பதிவு.
 
படம் 1
ஜீமெயில் செக்யூரிட்டி சற்று வளர்ந்து கொண்டு தான் வருகிறது.
நம் அலைபேசி எண்ணை நம்முடைய ஜீமெயில் கணக்கில் சேர்ப்பதன்
மூலம் எளிதாக நம் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கலாம்.
https://www.google.com/accounts/ManageAccount
 
படம் 2
 
படம் 3
கூகுளின் Manage Account  என்ற இந்த பக்கத்திற்குச் சென்று
நம் ஜீமெயில் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வரும்
திரை படம் 1- ல் காட்டியபடி இருக்கும் இதில் Change Password Recovery
options என்பதை சொடுக்கவும். அடுத்து ஒரு முறை Verify- க்காக
நம் கணக்கின் கடவுச்சொல்லை கூகிள் கேட்கும் அதற்கும் நம்
கடவுச்சொல்லை கொடுத்ததும் படம் 2-ல் உள்ளது போல் திரையில்
வரும் இதில் SMS என்பதில் Add a Mobile Phone Number என்பதை
சொடுக்கியதும் படம் 3-ல் உள்ளது போல் வரும் இதில் நாம்
இருக்கும் நாட்டையும் நம் அலைபேசி எண்ணையும் கொடுத்துவிடவும்
Save என்ற பொத்தானை அழுத்தி சேமித்துவிட்டு வெளியே
வரவும். இப்போது நம் கடவுச்சொல் மறந்துவிட்டால் கூகுளின்
ஜீமெயில் தளத்திற்கு சென்று Can’t access your account? என்பதை
சொடுக்கி நம் பயனாளர் பெயரை கொடுத்தால் மட்டும் போதும்
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு
அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில்
வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக
உருவாக்கிக் கொள்லலாம்.

No comments:

Post a Comment