Thursday, December 30, 2010

பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.



வார்த்தைகள் முதல் மென்பொருள் வரை அனைத்திலும் பதிலீடாக
உள்ளவற்றை எளிதாக தேடிக்கொடுக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
போட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலாக உள்ள மென்பொருள் ஏதும்
இருக்கிறதா என்று எங்கும் சென்று தேட வேண்டாம் போட்டோஷாப்
போன்ற மென்பொருளுக்கு பதிலீடாக உள்ள மென்பொருள்
அத்தனையையும் நமக்கு தெரிவிக்கவும், ஒரு வார்த்தைக்கு பதிலீடாக
ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று தேடும் அனைவருக்கும் உதவும்
வகையில் ஒருதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://dooblet.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  “Find Alternative”
என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எதற்கு alternative
வேண்டுமோ அதை கொடுத்து dooble என்ற பொத்தானை
சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் பதிலீடாக உள்ள
அனைத்தும் பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும்.எந்த வீதமான
பயனாளர் கணக்கும் தேவையில்லை, பலவிதமான பொருட்கள்
முதல் மென்பொருள் வரை அனைத்துக்கும் alternative நாம் எளிதாக
தேடலாம். Alternative வார்த்தை மற்றும்  Alternative மென்பொருள்
தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment