Sunday, December 26, 2010

ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்க


நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே. 

  • இதற்கு முதலில் இந்த லிங்கில் Which Loads Faster செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  
  • இதில் அவர்களே நான்கு வகை ஒப்பிட்டு தளங்களை கொடுத்து இருப்பார்கள் தேவையென்றால் பார்க்கவும் அல்லது நீங்களே தளங்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள Try my own matchup என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான இரண்டு தளங்களை கொடுத்து Go என்பதை க்ளிக் செய்யவும்.
  • GO அழுத்தியவுடன் இரண்டு தளங்களும் ஓபன் ஆகி எந்த தளம் ஓபன் ஆக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது என்ற முடிவு வரும்.

No comments:

Post a Comment