Saturday, December 11, 2010

யுஎஸ்பி கருவிகளை பாதுகாப்பாக நிறுத்த மற்றும் கூகிள் நோட்புக் இலவசமாக பெற

நண்பர்களே இப்பொழுது அனைவராலும் உபயோகிக்க கூடியது பென் ட்ரவை எனப்படுவது.  இந்த பென் ட்ரைவை நிறைய பேர் சரியாக கையாளுவதில்லை.  பென்ட்ரைவை முறையாக நிறுத்தாமல் கணினியில் இருந்து எடுப்பதால் உங்கள் பென்ட்ரைவில் வைத்துள்ள டேட்டாக்கள் எடுக்கமுடியாமல் போகலாம்.  அல்லது உங்கள் பென்ட்ரைவே செயலழிந்து போகலாம்.


இதனால் என்ன ஆகும் முக்கிய அலுவலக கோப்புகளின் பேக் - அப் அதில் வைத்திருப்போம்.  இதனால் அவசர அவசரமாக பென் ட்ரைவை உருவும் போது பென்ட்ரைவ் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது. 

உங்கள் கணினியில் உபயோகிக்கும் எந்த ஒரு யுஎஸ்பி கருவியையும் பாதுகாப்பாக நிறுத்த இந்த மென்பொருள் உதவிடும்.  மற்ற மென்பொருள்களை காட்டிலும் இதில் பயன்கள் அதிகம்.   அப்படி என்ன பயன்கள் உள்ளது இந்த மென்பொருளில்.  இந்த மென்பொருளில் நீங்கள் ஒரு பென்ட்ரைவினை செருகியிருக்கீர்கள் என்றால் அந்த பென்ட்ரைவில் எவ்வளவு மீதம் இடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.  பென்ட்ரைவின் பெயரை மாற்றிக் கொள்ளும் வசதி.   ஒரே நேரத்தில் அனைத்து யுஎஸ்பி கருவிகளை நிறுத்தும் வசதி.  இது போன்று நிறைய வசதிகள் உண்டு.

 
இந்த மென்பொருள் ஒரு சட்டரீதியான மென்பொருள்.  அதாவது மென்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனமே இலவசமாக கொடுக்கிறது.  இதற்கு நீங்கள் ஒரு படிவத்தினை பூர்த்தி செய்தால் போதும்.  இந்த படிவத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும்.  தேவை எனின் உங்களுடைய சந்தேகங்களை கீழுள்ள பெட்டியில் டைப் செய்து அனுப்பினால் அந்த கேள்விக்கான விடையை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வர்.   இந்த படிவத்தினை பூர்த்தி செய்த அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் உரிமத்தினை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.  ஆனால் இந்நிறுவனம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 7 வரை மட்டுமே கொடுத்திருந்தனர்.  ஆனால் இப்பொழுதும் கூட தரவிறக்க வழி செய்திருக்கின்றனர்.

மென்பொருளின் உரிமம் பெற சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment