Tuesday, December 28, 2010

கூகுள் குரோமில் பயனுள்ள நீட்சி- Scroll to Top Button

 கூகுள் குரோமில்  நிறைய வசதிகள் இருந்தாலும் சில வசதிகளுக்காக நாம் நீட்சியின் உதவியை நாடுவோம். அந்த வரிசையில் தற்போது நாம் காண இருப்பது Scroll to Top Button என்ற நீட்சியாகும். நாம் இணையத்தில் உலாவும் போது சில தளங்களில் இந்த விட்ஜெட் இணைக்க பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான தளங்களில் இந்த top பட்டன் இருக்காது. அது மாதிரி தளங்களில் நாம் கீழ் பகுதிக்கும் மேல் பகுதிக்கும் செல்ல சற்று சிரமமாக இருக்கும். இந்த குறையை போக்கவே இந்த நீட்சி.

இந்த நீட்சியை நிறுவினால் போதும் நீங்கள் குரோமில் எந்த தளத்திற்கு சென்றாலும் இந்த பட்டன்கள் தெரிவதை காண்பீர்கள். இனி நீங்கள் சுலபமாக எந்த தளத்திலும் மேற்பகுதிக்கும் கீழ்பகுதிக்கும் சுலபமாக செல்லலாம்.
இந்த நீட்சியை இந்த லிங்கில் Scroll to Top Button சென்று உங்கள் குரோமில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவியதும் உங்கள் உலவியில் இந்த பட்டன் சேர்ந்து விடும். இதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் குரோமில் 
  • Settings
  • Tools
  • Extensions
  • Scroll to Top Button - Options 

சென்று உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து Author Settings என்பதை க்ளிக் செய்து மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.
நன்றி : சூர்யகுமார் 

No comments:

Post a Comment