Friday, December 3, 2010

கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள்....


நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு 2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள். இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள்.

இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது. இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள். இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.


இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள்.


இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும். அத்துடன் லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி


No comments:

Post a Comment