Sunday, November 28, 2010

படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம்.



ஆன்லைன் மூலம் நம் புகைப்படத்தை ASCII எழுத்தாக மாற்றலாம்
அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புகைப்படத்தை எழுத்தாக மாற்ற பல இணையதளங்கள் வந்து
கொண்டே இருக்கின்றன அந்த வகையில் இன்று புகைப்படத்தை
ASCII ( American Standard Code for Information Interchange) எழுத்தாக
மாற்ற நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://picascii.com

படம் 2

படம் 3

படத்தை எழுத்தாக மாற்றுவது ஒரு பெரிய வேலை தான் என்று
பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் சோசியல் நெட்வோர்க்
-களில் புகைப்படத்தை எழுத்தாக மாற்றி உலாவ விட்டு இருப்பர்
அந்த வரிசையில் இனி நாமும் எளிதாக இந்தத்தளத்திற்கு சென்று
படம் 1-ல் காட்டியபடி Choose என்ற பொத்தானை அழுத்தி விரும்பிய
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து எழுத்தின் அளவை
அடுத்த கட்டத்தில் கொடுக்கவும் அடுத்தும் இருக்கும் Check box-ல்
கலருடன் எழுத்து வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு Generate என்ற பொத்தானை அழுத்தவும் சில நொடிகளில்
நாம் கொடுத்த புகைப்படத்தை எழுத்தாக மாற்றி அடுத்து வரும்
திரை காட்டும் அந்த எழுத்தை காப்பி செய்து Notepad-ல் பேஸ்ட்
செய்தாலும் புகைப்படம் அப்படி கருப்பு வெள்ளையுடன் வரும்
புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment