Saturday, November 27, 2010

Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.



புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
பழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.oldversion.com

இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet , File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment