Tuesday, November 30, 2010

உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட நபர்


அங்கோலாவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ டொமிங்கோ ஜோக்கிம் என்னும் 20 வயது வாலிபரே, உலகின் மிக அகண்ட வாயைக் கொண்ட நபர் என்னும் சாதனைக்கு சொந்தக்காரர். சிகிங்கோ என அழைக்கப்படும் இந்நபர் வாயினைக் அகட்டி செய்த சாதனைகள் இரு வருடங்களுக்கு முன் யூடுயுபில் வெளியானது. ஆனால் தற்போது தான் இவர் கின்னஸ் சாதனையில் இடம் பெற்று இருக்கிறார். வாயுக்குள் எவ்வளவு பெரிய பொருட்களையும் வைத்து இவர் நிகழ்த்தும் சாதனை, அங்கோலாவில் இவரை புகழடைய செய்துள்ளது.

இத்தாலியில் நடந்த பெரிய வாய் என்னும் பந்தயத்தில் கலந்துக் கொண்டு காப்பி கோப்பைகள், பாட்டில்கள் போன்ற பொருள்களை வாயுக்குள் அலேக்காக வைத்து எடுக்கிறார், பலே கில்லாடி தான். இப்படிச் செய்வதால் இவரை சோதனை செய்த பல் மருத்துவர்கள் இவரின் பற்கள் ஏதும் சேதம் அடையவில்லை எனக் கூறியுள்ளனர்.

வாயுள்ள பிள்ளைப் பிழைத்துக் கொள்ளும் என்று சும்மாவா சொன்னாங்கா?

No comments:

Post a Comment