பெரிய பழ்கலைக்கழகங்களில் சேர்ந்து பாடம் படிக்க முடியவில்லை
என்ற எண்ணம் இருக்கும் அனைவருக்கும் ஆன்லைன் மூலம்
பேராசியர்கள் பாடம் நடத்தும் வீடியோவை இலவசமாக பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அமெரிக்காவின் மிகப்பெரிய பழ்கலைக்கழங்களான Berkeley, Harvard,
MIT, Princeton, Stanford மற்றும் Yale போன்ற பழ்கலைக்கழங்களில்
இருக்கும் பேராசியர்கள் பாடம் நடத்தும் வீடியோவை நாம் ஆன்லைன்
மூலம் இலவசமாக பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://academicearth.org
பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை , பெரும் பணம்
செலவு செய்ய வேண்டாம், வெளி நாட்டிற்கு செல்லவும் வேண்டாம்.
இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் வீடியோவுடன்
கல்வி கற்கலாம். இந்ததளத்திற்கு சென்று நாம் எந்ததுறையில் பாடம்
படிக்க வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு எளிதாக
பேராசிரியர்களின் உரையை வீடியோவுடன் பார்க்கலாம்.
Mechanic Engineer முதல் Computer Engineer வரை அனைவரும்
தங்களுக்கு பிடித்த university பேராசியர்கள் நடத்திய பாடத்தை
ஆனலைன் மூலம் எளிதாக கற்கலாம். வெளிநாட்டில் கல்வி கற்க
வேண்டும் என்ற ஆசை உள்ள நம் தமிழ் நண்பர்களுக்கு இந்தப்
பதிவை கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை.
No comments:
Post a Comment