Monday, January 31, 2011


windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது எப்படி?

முதலில் இதன்அநுகூலம் என்ன

 என்பதை பார்ப்போமானால் 

Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும்
 DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக 
Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....



தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.



இனி எவ்வாறு Windows 7 bootable ளினை 
USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம். 

1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்


2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்


3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
  
4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும்.  My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்




5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit CtrlShiftEnter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on 
Command Prompt and select Run as administrator.


6.  Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்


D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள்  DVD drive letter யினை தரவும்


அடுத்து  CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்


7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
    இங்கு H பதிலாக உங்கள்  Flash drive letter யினை தரவும் 

8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்


 9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..


இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..


>>>>>>Bios ல் boot priority  யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்<<<<<<

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில 

டிக்ஸ்னரி


ஆங்கிலத்தில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு விளக்கம் தேட
ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் நேரடியாக
விளக்கம் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கில வார்த்தைகளில் பல புதுமையான வார்த்தைகள் பார்க்கும்
போது அந்த வார்த்தைக்கான விளக்கத்தை தேடி பல தளங்கள்
செல்வதுண்டு பல தளங்களில் நாம் தேடிய வார்த்தை கிடைப்பதும்
இல்லை இந்த நேரத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.dictionary.hm
இந்தத் தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் எந்த வார்த்தைக்கு விளக்கம் வேண்டுமோ
அந்த வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும் உடனடியாக
நமக்கு அதே திரையில் நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தைக்கான
விளக்கம் சில நொடிகளில் வரும்.  Ajax தொழில்நுட்பத்தில்
இருக்கும் வார்த்தை Catcher என்ற புதிய முறையின் மூலம்
இவர்கள் நேரடியாக தேடிக்கொடுக்கின்றனர். இந்தத்தளத்தில்
நாம் தேடும் வார்த்தைக்கான விளக்கமும் நமக்கு திருப்தி
அளிக்கும் வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக
இந்ததளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர்




உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம்.அதற்க்கு முன்பு சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் . வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த  வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் .











பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க 

 

உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க .

வலைதள முகவரி : http://reddodo.com/

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க


நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்கEuropean Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test fileஎன்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
Notepad

பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Notepad Save As

Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.

Notepad Save dialog

பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம.உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.

கீழே நான் நிறுவி உள்ள Avira ஆண்டிவைரஸ் check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்வதை கீழே காணலாம்.

avira virus alert

Source:
 http://en.wikipedia.org/wiki/EICAR

மூன்றே மூன்று இணையத்தளம்


இணையத்தில் பரவிக்கிடக்கும் தளங்களில் சில பிரபல்யமாகவும் சில தெரிந்தும் தெரியாமலும் என எண்ணிக்கணக்கு எடுக்க முடியாத அளவு இருக்கிறது. அதில் சில பிரயோசனமான தளங்களைப் பற்றி கூறப்போகிறேன். அனைவருக்கும் பிரயோகமாக இருந்தாலும் அதன் வலிமை தெரிவதில்லை. ஆகவே அதனைப் பற்றி நன்றாக அறிய வேண்டும்.


10 நிமிடம் மட்டும்
இணையத்தில் பல சேவைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வங்காட்டும் போது, அவற்றைப் பெறுவதற்கு Sign up செய்கையில் எமது மின்னஞ்சல் முகவரியை வழங்குவது கட்டாயமாகிறது. இதனால், எமது மின்னஞ்சல் பெட்டிக்கு வகைதொகையின்றி எரிதங்கள் எனப்படும் SPAM வர வாய்ப்பேற்படுகிறது. இதனைத் தடுப்படுதற்காக, 10 நிமிடம் மட்டும் செயற்படும் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை தரும் ஒரு இணையத்தளமொன்று உள்ளது.




இதனைப் பெறுவதற்கு எந்தவித Form உம் நிரப்பவேண்டியதில்லை. அவ்விணையத்திலுள்ள இணைப்பை கிளிக் செய்ததும் எமக்குரிய மின்னஞ்சல் முகவரி தரப்படும். 10 நிமிடங்களுக்குள் அந்த முகவரிக்கு எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவற்றைப் பார்க்க முடியும். ஏன் பதிலும் அனுப்ப முடியும். 10 நிமிடம் போதாதென்றால் இன்னும் 10 நிமிடம் கூட்டியும் கேட்கலாம். ஆக தற்காலிக முகவரியை உருவாக்கி இணையச் சேவைகளைப் பெறுவதால், எமக்கு SPAM தொல்லை இருக்காது. http://10minutemail.com என்பதே இவ்விணையத்தள முகவரியாகும்.

இலவசமாய் நிழற்படங்கள்

பதிப்புரிமை செய்யப்பட்ட விடயங்களை பாவிப்பது, புலமைச் சொத்து தொடர்பான சட்டப்பிரச்சினைக்குள் கொண்டு செல்லும். இணையத்திலுள்ள பல நிழற்படங்கள் பதிப்புரிமை செய்யப்பட்டவையாகும். அவற்றை மீளப்பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதான விடயமாகும். ஆனாலும் இணையப்பரப்பிலே பதிப்புரிமை செய்யப்படாத விடயங்களும் காணப்படுகின்றன.


அதனில், பதிப்புரிமை செய்யப்படாத அனைத்தும் தமது தேவைக்கும் பயன்படுத்தக்கூடிய வகையிலுள்ள Royalty Free நிழற்படங்களை, everystockphotoஎனும் இணையத்தளம் வழங்குகின்றது. இவ்விணையத்தளத்தில் இருந்து எமக்குத் தேவையான நிழற்படங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விணையத்தளத்தின் முகவரி,http://everystockphoto.com என்பதாகும்.

ஒரே பார்வையில்

எமக்குத் தேவையான இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஆகியவற்றை ஒரே பக்கத்தில் காட்டக்கூடிய இணையத்தளமொன்றைப் பற்றிக் காண்போம். இந்த இணையத்தளத்திலே எமக்குத் தேவையான இணையத்தளங்களின் அல்லது வலைப்பதிவுகளின் ஊட்டங்களுக்கான (RSS, XML Feed) முகவரிகளை வழங்குவதன் மூலம் அவற்றினை இந்த இணையத்தளத்தின் பக்கத்திலே காணலாம்.


அத்தோடு, இவ்விணையப் பக்கத்திற்கு நாம் விரும்பும் தலைப்பைக்கூட வழங்கலாம். இவ்விணையத்தளத்தில் சேர்க்கப்படக்கூடிய அத்தியாவசியமான இணைய அடிப்படையான சின்னச் சின்ன மென்பொருள்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையத்தள முகவரி www.netvibes.com

கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.


கணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்
மால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்
பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக
இருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.
உலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்
இது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட
வந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்
அடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.filehippo.com/download_ccleaner/
இந்த தளத்திற்கு சென்று CCleaner மென்பொருளின் புதிய பதிப்பை
இலவசமாக தரவிரக்கி கொள்லலாம். மென்பொருளை இயக்கி
நம் கணினியில் தேவையில்லாமல் இயங்கும் ஸ்பைவேர்
மற்றும் மால்வேர் போன்றவற்றை எளிதாக நீக்கலாம். வைரஸ்
நீக்கும் மென்பொருள் பயன்படுத்துவதால் நம் கணினியின் வேகம்
குறைவாக இருக்கும் என்று நினைப்பவர்களும் இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தலாம். கண்டிப்பாக கணினி பயன்படுத்தும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, January 29, 2011

பேஸ்புக்கும் நிறுவனத்தின் புதிய மொபைல் அப்ளிகேசன். [இலங்கையில் டயலொக்]


சமூக வலைத்தளங்களின் ராஜாவான ஃபேஸ்புக் இணைய தளம் இன்று புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் ஸ்மார்ட் போன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த ஃபேஸ்புக்கானது தற்போது சாதாரண மொபைல் பக்கமும் திரும்பியுள்ளது.
இந்த புதிய அப்ளிகேசன் மூலம் ஃபேஸ்புக் இணைய தளத்தை இலகுவாக வலம்வர முடியும். குறிப்பாக Profile, Newsfeeds, Friend list, Photo என்பவற்றை இலகுவாகவும் தெளிவாகவும் உங்கள் மொபைல் தொலைபேசியில் பாவிக்கக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக சில கையடக்க தொலைபேசி வழங்குனர்கள் இந்த சேவையினை எந்தவித கட்டணமும் இல்லாமல்(GPRS கட்டணம்) இலவசமாக முதல் 90 நாட்களுக்கு வழங்குவார்கள் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வழங்குனர்களின் பட்டியல் பின்வருமாறு,
இலவச சேவையினை இன்று முதல் வழங்கும் நிறுவனங்கள்
  • Dialog (Sri Lanka)
  • Life (Ukraine)
  • Play (Poland)
  • StarHub (Singapore)
  • STC (Saudi Arabia)
  • Three (Hong Kong)
  • Tunisiana (Tunisia)
  • Viva (Dominican Republic)
  • Vodafone (Romania)
மிக விரைவில் கீழ்வரும் வழங்குனர்கள் இந்த இலவசச் சேவையினை வழங்குவார்கள்
  • Mobilicity (Canada)
  • Reliance (India)
  • Telcel (Mexico)
  • TIM (Brazil)
  • Vivacom (Bulgaria
இந்த புதிய அப்ளிகேசனானது Snaptu நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் 2500 வகைக்கும் மேலான கையடக்க தொலைபேசிகள் பாவிக்ககூடியதாகவும் இருக்கும் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறிப்பாக Nokia, Sony Ericsson, LG போன்ற பிரதான கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
fb appஇந்த புதிய அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய இந்த m.fb.snaptu.com/f முகவரிக்கு உங்கள் கையட்டக்க தொலைபேசியினூடாக சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த புதிய அப்ளிகேசன் தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert


நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். 
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.
 புதிய மெயில் வந்தால் 

புதிய சாட்டிங் வந்தால் 

  • இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.
  • படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை புதிய மெயில் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
  • சாட்டிங் வந்தாலும் இப்படி நமக்கு செய்தி வரும்.


லிபேர் ஆபிஸ் மென்பொருள் திறந்த நிலை மென்பொருள் குறித்த கட்டுரை

நண்பர்களே நம் அனைவரும் விண்டோஸில் வேர்டு, எக்ஸல், பவர் பாய்ண்ட் போன்ற கோப்புகளை திறக்க மற்றும் எடிட் செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேண்டும்.   மைக்ரோசாப்ட் ஆபிஸ் எல்லாருமே உபயோகிக்கிறார்கள்.  ஆனால் காசு கொடுத்து வாங்கி அல்ல இணையத்தில் இருந்து திருடியும், இன்னொருவர் வாங்கிய உரிமையை இவர்களும் உபயோகபடுத்திக் கொள்கிறார்கள்.  இவ்வாறு இணையத்தில் இருந்து ட்ரையல் வெர்சன் மற்றும் திருட்டு மென்பொருளை நிறுவுவதால் வைரஸ் மற்றும் நச்சு மென்பொருட்கள் வர வாய்ப்பு உண்டு.  இது மாதிரி திருட்டு மென்பொருளை உபயோகிப்பதை விட திறநத நிலை மென்பொருட்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. 

அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள்  லிபர் ஆபிஸ் இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருள் இதுவரை பீட்டா என்னும் சோதனை பதிப்பாகவே இருந்து வந்தது.  இப்பொழுது இந்த மென்பொருளின்  சோதனை பதிப்பு முடிந்து Stable என்னும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த Stable பதிப்பு வெர்சன் Libre Office 3.3.0 என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளில் வேர்ட் ப்ரோஸசர், ஸ்ப்ரெட்சீட்,  ப்ரசண்டேசன் மேனேஜர், சார்ட், டைக்ராம் வரையவும் முடியும். ODBC என்னும் டேட்டாபேஸ்களை இணைக்கவும் முடியும் என்பது சிறப்பம்சம்

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம்.  சுட்டி

இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும்  என்பது இதன் சிறப்பு.


இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு.  ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.


லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.  அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம்.  நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது.  இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம்.  

இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம்.   அல்லது டொரண்ட் வழியாகவும்  தரவிறக்கலாம்.  அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.

லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க சுட்டி

லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க சுட்டி

டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.

பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது.  அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )



இஅசூஸ் பார்டிசன் மென்பொருள் போலவே இன்னொரு மென்பொருள் Aomei Partition Assistant Professional Edition  இந்த மென்பொருள் இன்று வரை (28-01-2011)இலவசமாக வழங்கப்படுகிறது.  தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.  சுட்டி
 

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது 

எப்படி


கூகிள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியில்
நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம்
பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension.    Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம்.  இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது  Download என்பதை  குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.
தரவிரக்க முகவரி :  Download
இந்தத்தளத்திற்கு சென்று நாம் Install  என்ற பொத்தானை சொடுக்கி
நிறுவிக்கொள்ள வேண்டும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Tools
என்பதை தேர்ந்தெடுத்து அதில் Extension என்பதை சொடுக்கி
வரும் திரையில் simple startup password  என்பதில் Options என்பதை
சொடுக்கி பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். அடுத்த முறை
நாம் கூகுள் குரோம் உலாவியை திறக்கும் போது பாஸ்வேர்ட்
கேட்கும் இதில் சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான்
நுழையமுடியும். கண்டிப்பாக இந்தப்பதிவு பெற்றோர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?


பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன. 
இப்படி கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காமல் கவலை படுகிறீர்களா தங்களுக்காக ஒரு சிறந்த விளம்பர தளத்தை அறிமுக படுத்தி வைக்கிறேன்.
  1. இதில் கூகுள் அட்சென்ஸ் போன்று நிறைய கோட்பாடுகள் இல்லை குறிப்பாக மொழியை வைத்து எந்த தளத்தையும் நிராகரிப்பதில்லை.
  2. குறைந்தது 10$ வருவாய் வந்தவுடன் நமது வங்கி கணக்கில் BANK TRANSFER செய்து விடுவார்கள்.
  3. 90% கோரிக்கைகளை நிராகரிப்பதில்லை அனைத்தையும் ஏற்று கொள்கிறார்கள்.
  4. APPROVED செய்த அடுத்த வினாடியே நாம் விளம்பரங்களை நம் தளத்தில் போட்டு கொள்ளலாம்.
  5. குறிப்பாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
இணையும் முறை :
  • இந்த தளத்தின் விளம்பரங்கள் உங்களுக்கு கிடைக்க கீழே உள்ள பேனர்(படத்தின் மீது) க்ளிக் செய்யுங்கள்.(இந்த பேனர் மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).

மேலே உள்ள படத்தின் மீது  செய்யவும் 
  • இது நேராக உங்களை இந்த தளத்திற்கு கொண்டு செல்லும். அங்கு சென்றவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Publishers பகுதியில் உள்ள Register என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அந்த படிவத்தில் உள்ள கட்டங்களில் உங்களின் சரியான விவரங்களை பூர்த்தி செய்து கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Preferred Payment Mode என்பதில் Bank Pay என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் அந்த படத்தில் உள்ள எங்களை சரியாக பொருத்தி கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்தவும்.

  • பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும் அதை அவர்கள் பரிசிலித்து அதிக பட்சம் 2 நாட்களுக்குள் மெயில் அனுப்பி விடுவார்கள்.
  • உங்கள் கோரிக்கை ஏற்க்கப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போல மெயில் வரும் இதில் உள்ள Click here to login என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் User name, Password கொடுத்து உள்ளே நுழையவும். 

பிளாக்கில் விளம்பரம் வெளியிடும் முறை :
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள Ad Display Code என்பதை க்ளிக் செய்து Create New Desktop Ad Unit என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பிளாக் வசதிக்கு ஏற்ப தேவையான அளவில் பேனர் தேர்வு செய்து கீழே உள்ள Generate HTML Code என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் தேவைபட்டால் மாற்றங்கள் செய்து கொண்டு Update Preview code கொடுக்கவும்.
  • இப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DESIGN- ADD A GADGET - HTML JAVASCRIPT - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
  • நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கை சேமித்து உங்கள் பிளாக் திறந்து பாருங்கள் உங்கள் தளத்தில் விளம்பர பேனர் வந்திருக்கும். இனி வாசகர்கள் இந்த பேனர் மீது க்ளிக் செய்தாலே போதும் உங்களுக்கான வருவாய் ஏறிக்கொண்டே இருக்கும்.
  • குறைந்தது 10$ சம்பாதித்தால் தான் உங்களால் அந்த பணத்தை பெற முடியும்.
  • இதில் உள்ள REFERAL வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கலாம். இதன் மூலமும் உங்கள் வருவாய் பெருகும்.