Saturday, January 22, 2011

குறித்தவொரு பகுதியை வெட்டி ஒட்டலாம் வாங்க!

நாம் இன்று புதியதொரு நுட்பத்தை அறியப்போகிறோம். இது பிளாக்கர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுண்டு. அதாவது நம்முடைய தளத்தை அழகாக்கி வாசகர்களை அதிகம் விரும்பும் வகையிலும் அதிக பதிவுகளையும் இடுவோம். இருந்தும் குறித்தவொரு தளத்தின் குறித்தவொரு பகுதியை வெட்டி ஒட்டுதல் என்பது கடினமான வேலையாகும்.
இதனை இலகுவாக முடிக்க இந்த தளம் உதவுகிறது. உதாரணமாக சில தளத்தில் உள்ள செய்தி மட்டும் காட்சியளிக்க வேண்டுமென்று எண்ணினால் அதை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி மட்டும் கூறப்போகிறேன். ஆனால் செய்தி மட்டுமன்றி பல வேலைகளையும் செய்யலாம். ஒன்றைப் பற்றி மட்டும் கூறப்போகிறேன். மேலதிக சந்தேகங்களை ஈ-மெயில் மூலமாகவோ அல்லது கமெண்டிலோ கேட்கலாம்.
இனி விடயத்திற்கு வருவோம். இது Yahoo! வினால் வழங்கப்படும் ஒரு சேவையாகும்.

>> முதலில் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
http://open.dapper.net/account-create.php

>> பதிவு செய்த பின் உள்நுழைந்து(Login) கொள்ளுங்கள்.
http://open.dapper.net/login.php

>> இனி படங்களை பார்த்து பின்பற்றுக.(படங்களை பெரிதாக்கி பார்க்கவும்.)

Create a New Dapp என்பதை கிளிக் செய்க


அந்த தளத்தின் முகவரி(Address) எனும் இடத்தில் நீங்கள் விரும்பிய முகவரியை டைப்(type) செய்க.
Add as sample என்பதில் இரண்டு பக்கங்களை கிளிக் செய்ய வேண்டும். உதாரணமாக முகப்பு(Home Page) பக்கத்தையும் மற்றொரு பக்கத்தையும் கிளிக் செய்க. ஒவ்வொன்றாக Add as sample என கிளிக் செய்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும். குறைந்தது இரண்டு பக்கங்கள் இருக்க வேண்டும்.
அடுத்தாக தலைப்பை அல்லது உள்ளடக்கத்தை கிளிக் செய்த பிறகு Save Field என்பதை கிளிக் செய்யும் போது Field Name என கேட்குமிடத்தில் தலைப்பை இடவும். Ex: Headlines
Content Fields  இல் உங்களுடைய தலைப்பு காணப்படும். அதில் Check box இல் Check பண்ணிவிட்டு Save Group என்பதை கிளிக் செய்யும் போது Group Name கேட்டு வரும். அதில் குறித்த Group Name ஐ டைப் செய்க. Ex: Hot News

படத்தில் விளக்கம் காட்டப்பட்டுள்ளது.

படத்தில் விளக்கம் காட்டப்பட்டுள்ளது.
All Done? Get Embed Code என்பதை கிளிக் செய்தவுடன் வரும் Code இணை காப்பி(Copy) செய்து உங்களுடைய பிளாக் அக்கவுண்டினுள் நுழைந்து சேர்த்து கொள்ளுங்கள்.
Dashboard > Design > Add a Gadget > HTML/JavaScript > Past your Code

No comments:

Post a Comment