மூன்றே மூன்று இணையத்தளம்
இணையத்தில் பரவிக்கிடக்கும் தளங்களில் சில பிரபல்யமாகவும் சில தெரிந்தும் தெரியாமலும் என எண்ணிக்கணக்கு எடுக்க முடியாத அளவு இருக்கிறது. அதில் சில பிரயோசனமான தளங்களைப் பற்றி கூறப்போகிறேன். அனைவருக்கும் பிரயோகமாக இருந்தாலும் அதன் வலிமை தெரிவதில்லை. ஆகவே அதனைப் பற்றி நன்றாக அறிய வேண்டும்.
10 நிமிடம் மட்டும்
இணையத்தில் பல சேவைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வங்காட்டும் போது, அவற்றைப் பெறுவதற்கு Sign up செய்கையில் எமது மின்னஞ்சல் முகவரியை வழங்குவது கட்டாயமாகிறது. இதனால், எமது மின்னஞ்சல் பெட்டிக்கு வகைதொகையின்றி எரிதங்கள் எனப்படும் SPAM வர வாய்ப்பேற்படுகிறது. இதனைத் தடுப்படுதற்காக, 10 நிமிடம் மட்டும் செயற்படும் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை தரும் ஒரு இணையத்தளமொன்று உள்ளது.
இதனைப் பெறுவதற்கு எந்தவித Form உம் நிரப்பவேண்டியதில்லை. அவ்விணையத்திலுள்ள இணைப்பை கிளிக் செய்ததும் எமக்குரிய மின்னஞ்சல் முகவரி தரப்படும். 10 நிமிடங்களுக்குள் அந்த முகவரிக்கு எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவற்றைப் பார்க்க முடியும். ஏன் பதிலும் அனுப்ப முடியும். 10 நிமிடம் போதாதென்றால் இன்னும் 10 நிமிடம் கூட்டியும் கேட்கலாம். ஆக தற்காலிக முகவரியை உருவாக்கி இணையச் சேவைகளைப் பெறுவதால், எமக்கு SPAM தொல்லை இருக்காது. http://10minutemail.com என்பதே இவ்விணையத்தள முகவரியாகும்.
இலவசமாய் நிழற்படங்கள்
பதிப்புரிமை செய்யப்பட்ட விடயங்களை பாவிப்பது, புலமைச் சொத்து தொடர்பான சட்டப்பிரச்சினைக்குள் கொண்டு செல்லும். இணையத்திலுள்ள பல நிழற்படங்கள் பதிப்புரிமை செய்யப்பட்டவையாகும். அவற்றை மீளப்பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதான விடயமாகும். ஆனாலும் இணையப்பரப்பிலே பதிப்புரிமை செய்யப்படாத விடயங்களும் காணப்படுகின்றன.
அதனில், பதிப்புரிமை செய்யப்படாத அனைத்தும் தமது தேவைக்கும் பயன்படுத்தக்கூடிய வகையிலுள்ள Royalty Free நிழற்படங்களை, everystockphotoஎனும் இணையத்தளம் வழங்குகின்றது. இவ்விணையத்தளத்தில் இருந்து எமக்குத் தேவையான நிழற்படங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விணையத்தளத்தின் முகவரி,http://everystockphoto.com என்பதாகும்.

ஒரே பார்வையில்
எமக்குத் தேவையான இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஆகியவற்றை ஒரே பக்கத்தில் காட்டக்கூடிய இணையத்தளமொன்றைப் பற்றிக் காண்போம். இந்த இணையத்தளத்திலே எமக்குத் தேவையான இணையத்தளங்களின் அல்லது வலைப்பதிவுகளின் ஊட்டங்களுக்கான (RSS, XML Feed) முகவரிகளை வழங்குவதன் மூலம் அவற்றினை இந்த இணையத்தளத்தின் பக்கத்திலே காணலாம்.
அத்தோடு, இவ்விணையப் பக்கத்திற்கு நாம் விரும்பும் தலைப்பைக்கூட வழங்கலாம். இவ்விணையத்தளத்தில் சேர்க்கப்படக்கூடிய அத்தியாவசியமான இணைய அடிப்படையான சின்னச் சின்ன மென்பொருள்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையத்தள முகவரி www.netvibes.com

No comments:
Post a Comment