Friday, January 14, 2011

(High resolution wallpaper Download ) கணினிக்கு 

தேவையான குவாலிட்டி வால்பேப்பர் 


இலவசமாக தரவிரக்கலாம்.


வால்பேப்பர் தேடி ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டாம்.
அனைத்து விதமான வால்பேப்பரும் குவாலிட்டியாக தரவிரக்க
உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினிக்கு தேவையான வால்பேப்பர் எல்லா இணையதளங்களிலும்
இலவசமாக கிடைத்தாலும் ஒரு சில தளங்களில் மட்டும் தான்
தரமான குவாலிட்டியான வால்பேப்பர் நமக்கு கிடைக்கிறது. அந்த
வகையில் தரமான வால்பேப்பர் தரவிரக்க நமக்கு உதவியாக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://interfacelift.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எந்த வகையான
வால்பேப்பர் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Search என்ற
பொத்தானை சொடுக்கி வால்பேப்பர்-ஐ தேடி நம் திரையின் அளவு
( Screen)-க்கு தகுந்த மாதிரி எந்த அளவு வேண்டுமோ அந்த
அளவை தேர்ந்தெடுத்துக்கொண்டு Download என்ற பொத்தானை
சொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். நீங்கள் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் திரையின் அளவு என்ன என்பதையும் அதற்கு
தகுந்தாற்போல் வால்பேப்பர்-ஐ Automatic ஆக தேர்ந்தெடுத்து
நமக்கு காட்டும். வால்பேப்பர் மற்றும் High Quality image தேடும்
அனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment