வலை பக்கங்களை Bookmark செய்வதை விட சிறந்த முறை
இன்டர்நெட்டில் நாம் பல்வேறு பயனுள்ள விடயங்களை பார்க்கிறோம், எமக்கு தெரியாத விடயங்களை உடனே கூகுளில் தேடி பெற்றுகொள்கிறோம்.அதே போன்று பல கணணி பயிற்ச்சி உட்பட பல அறிவை வளர்க்கும் விடயங்களை கூட இன்று இன்டர்நெட்டில் தான் கிடைகின்றது.நாம் இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டு இருக்கும் போது நமது கண்ணில் படுகின்ற சுவாரிசியமான விடயங்கள் அல்லது எது நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நினைக்கின்ற வலைபக்கங்களை முதலில் நாம் bookmark செய்து கொள்வோம். பின்னர் 2,3 நாட்கள் சென்ற பின் bookmark செய்த பக்கத்தை திறக்கும் போது சிலவேளைகளில் திறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அந்த பக்கத்தின் வலை முகவரி மாற்றப்பட்டு இருக்கும் அல்லது இடுக்கை இட்ட நபரால் நீக்கப்பட்டு இருக்கும். அந்த சந்தர்பத்தில் குறிபிட்ட விடயம் கை விட்டு போய்விட்டதே என்று தோன்றும். இந்த ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த மாற்றுவழி என்றால் நீங்கள் விரும்பிய பக்கத்தை save பன்னிகொள்வதுதான். ஒரே click இல் நீங்கள் விரும்பிய பக்கத்தை pdf file format இல் save பன்னலாம். save செய்த பக்கத்தை இன்டர்நெட் வசத்தில் இல்லாத கணனியில் கூட open செய்து பார்க்கலாம். இந்த முறை Netcafe போய் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறு வலைபக்கத்தை pdf file ஆக save செய்வது என்று கிழே உள்ள படிமுறையை பாருங்கள்.google chrome ஐ திறந்து கிழே உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள்.பின்னர் கிழே உள்ள படத்தில் போன்று ஒரு வலை பக்கம் தோன்றும். அதில் install எனும் பட்டன் ஐ clcik பன்னினால் உங்கள் google chrome browser இல் install செய்துகொள்ளும்.
install செய்த பின் உங்கள் browser இல் address bar இன் அருகே ஒரு icon தோன்றும் நீங்கள் விருபிய பக்கத்தை save செய்து கொள்ள இந்த icone ஒரு முறை click செய்து save கொடுத்தல் போதும் அது உங்கள் வலை பக்கத்தை pdf file வடிவில் save செய்து விடும்.
No comments:
Post a Comment