Friday, January 28, 2011


ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert

நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். 
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.
 புதிய மெயில் வந்தால் 

புதிய சாட்டிங் வந்தால் 

  • இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.
  • படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை புதிய மெயில் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
  • சாட்டிங் வந்தாலும் இப்படி நமக்கு செய்தி வரும்.

No comments:

Post a Comment