Sunday, January 23, 2011

Groupon இணைய தளத்திற்கு போட்டியாக Google Offers [அதிரடித் தகவல்]


இணைய தள சந்தையில் தனக்கென்றெரு இடத்தை பிடித்த Groupon இணைய தளத்திற்கு போட்டியாக தேடல் வேந்தன் கூகிள் மற்றுமொரு அறிமுகத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Groupon இணைய தளத்தை தன்வசப்படுத்த எடுத்த முயற்சியில் தோல்விகண்ட கூகிள் தற்போது தானே ஒரு பிரதியீட்டை வழங்க இருப்பது பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியினை உறுதிப்படுத்தும் வகையில் கூகிளும் ஒரு அறிவித்தலினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
google offers
Google Offers இன் லோகோ அடங்கிய url ஒன்று இந்த புதிய சேவையினை இன்னும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த முகவரியினை க்ளிக் செய்து அந்த லோகோவினை கூகிளின் லோகோ பெட்டகத்தில் பாருங்கள்.
எது எவ்வாறாக இருந்தாலும் இவ்வாறான சேவைகள் இலங்கை , இந்தியா போன்ற நாடுகளுக்கு வந்து சேர நீண்ட காலமாகிவிடும் என்பதே எனது கவலை.

No comments:

Post a Comment