Friday, January 14, 2011

மிர்ரர் கிரியேட்டர்


நிறைய நண்பர்கள் எப்பொழுதும் கோப்புகளை அப்லோடு செய்து அனைவருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக சென்று அப்லோடு செய்ய வேண்டும்.  ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு முறை அப்லோடு செய்தாலே பதினான்கு தளங்களுக்கும் அப்லோடு செய்யப்பட்டு தனி தனி லின்க் கிடைத்து விடுகிறது.  அவர்களுக்கும் இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் ஒரே நேரத்தில் 14 தளங்களில் நம் கோப்புகளை பதிவேற்ற முடியும். 


அந்த 14 தளங்களில் மிகவும் முதன்மையான ரேபிட்ஷேர், ஹாட்பைல், டெபாசிட்பைல், ஜித்து, சென்ட்ஸ்பேஸ், பைல்பேக்டரி, மெகாஷேர், மெகாஅப்லோடு, மீடியாபயர் போன்ற தளங்கள் ஆகும்.  அத்துடன் தரவேற்றம் முடிந்த பிறகு அந்த தளம் வழியாக தரவிறக்கமும் தருகிறார்கள்.  தளத்தில் அப்லோடு செய்தவுடன் அவர்கள் ஒரு தரவிறக்க லின்க் மற்றும் அதன் ஷார்ட்கட் லின்க் ஒன்று தருகிறார்கள் அதை நம் நண்பர்களுக்கு தந்தால் அல்லது எங்கு வேண்டுமானாலும் உபயோகடுத்திக் கொள்ளலாம்.   இந்த வலைத்தளத்தின் பெயர் மிர்ரர் கிரியேட்டர்



உதாரணத்திற்கு நான் WinX DVD author மென்பொருளினை தரவேற்றியிருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.  இது ஒரு வீடியோ கன்வெர்டர் மென்பொருள் மிகவும் அருமையான வேகமான மென்பொருள் ஆகும்.  கன்வெர்ட் செய்த பிறகு நேரடியாக சிடி மற்றும் டிவிடியில் எரிக்க முடியும்.  இது ஒரு சலுகையின் போது எனக்கு கிடைத்தது அதை நீங்கள் உபயோகபடுத்திக் கொள்ள இங்கே தருகிறேன். 

WinX DVD Author மென்பொருள் தரவிறக்க 14 தளங்களின் முகவரிகள் 


WinX DVD Author லைசென்ஸ் எண் தரவிறக்க 14 தளங்களின் முகவரிகள்


லாவாசாப்ட் நிறுவனத்தின் ஆறு மாதத்திற்கான இலவச மென்பொருள் தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி  இந்த மென்பொருள் மிகவும் உபயோகமான மென்பொருள்.  உங்கள் கணினியின் தீங்கு நச்சு நிரல்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment