Saturday, January 22, 2011


ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய 

வார்த்தை.


ஆங்கிலத்தை பொருத்தவரை ஒரே பொருளுக்கு பல வார்த்தைகள்
இருந்தாலும் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தையைத்தான்
இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு மாற்றாக
நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இணையான பொருள் உள்ள
வார்த்தையை நொடியில் தேடலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுபவரில் இருந்து கதை எழுதுபவர்கள்
வரை, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் கல்லூரி செல்லும்
இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் மேலும் பல
வார்த்தைகளை கற்றுகொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.ironicsans.com/thsrs/
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கு இணையான சிறிய வார்த்தை
வேண்டுமோ அதைக் கொடுத்து Look up என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த வார்த்தைக்கு
இணையாக உள்ள சிறிய வார்த்தைகளை பட்டியலிடும் இதில்
இருந்து நமக்குத் தேவையான வார்த்தையை நாம் எடுக்கலாம்.
ஆங்கிலம் கற்றவர்களுக்கும் புதிதாக ஆங்கிலம் கற்றுக்
கொண்டிருப்பவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment