Wednesday, August 31, 2011

ஜிமெயிலில் வரும் Spam மெயில்களை Automatic Delete செய்ய

கூகுள் வழங்கும் அற்ப்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயில் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம். நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ,அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப்படி இணையத்தில் நம்முடைய மெயில் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில்களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நம்மக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.

Follow Steps:

1) உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.

2) Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.

3) Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.

4) அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள்.


5) அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும்.

6) அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும்.


7) அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam ஈமெயில்கள் தானாக Delete ஆகிவிடும்.

Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited  Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல ஈமெயில்களும் அழிந்து விடும்

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...


முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.


  • 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
  • 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.
  • 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.
  • 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறந்து.மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.
  • 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
  • யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.
  • 1700+ பயர்பாக்ஸ் உலவி டவுன்லோட் செய்யப்படுகிறது.
  • ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய மேலே உள்ள படத்தில் கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள் தெரியும்.

Sunday, August 28, 2011

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.


நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஆன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம்,இவை எல்லாவற்றையும் விட சிறந்த முறையில் நம் புகைப்படங்களுக்கு எஃபெக்ட் கொடுக்கலாம்  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://ipiccy.com
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில்  Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில்  என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதா ஒரே சொடுக்கில் செய்யலாம். கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி  சேமிக்கலாம் நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த
மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம். புகைப்படத்தை வித்தியாசமாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.

online மூலம் போட்டோ Editing செய்யலாம்


இதில் photoshop யில் உள்ள அனனத்து tools காணப்படுகின்றது .
online மூலம் போட்டோ Editing செய்யலாம் 
இதில் மிகவும் இலகுவாக image Editing செய்யலாம்
http://pixlr.com/editor/

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி....


உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது.
இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியத்தை இணையவாசிகளுக்கு விளக்க வேண்டியதில்லை.ஸ்பேம் என்று சொல்லப்படும் வீணான இமெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒருவருடைய இமெயில் முகவரி இணைய கயவர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
இதற்கு நம்பகத்தனமை இல்லாத இடங்களில் இமெயில் முகவரியை தராமல் இருப்பதே சிறந்தது.ஆனால் சில நேரங்களில் தகவல்கலை பெற இமெயில் முகவரியை சமர்பிப்பதை தவிர வேறு வழியில்லை.
இது போன்ற நேரங்களில் சமர்பிப்பதற்காக என்றே தற்காலிக இமெயில் முகவரிகளை உருவாக்கி கொள்ளலாம் தான். எண்ணற்ற தளங்கள் இப்படி யூஸ் அண்டு துரோ வகை முகவரிகளை வழங்குகின்றன.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தளங்களுக்கு இந்த தற்காலிக முகவரிகள் ஒகே.ஆனால் தொடர்ச்சியாக தகவல்களை பெற நினைக்கும் போது நிரந்தரமான இமெயில் முகவரி தேவை.
இந்த இடத்தில் தான் இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் மறைத்து அனுப்பும் அவசியம் ஏற்படுகிறது.ஸ்கிர்.ம் சேவை இப்படி முகமுடியோடு இமெயிலை அனுப்ப உதவுகிறது.
இருப்பினும் இந்த சேவை இமெயில் முகவரிகளை அறுவடை செய்யும் பாட்களிடம் இருந்து தப்பிப்பதற்கானது.இமெயில் முகவரியை சமர்பிக்காமாலேயே இமெயில் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் நிலையில் இவை உதவாது.
அதாவது சில நேரங்களில் அனேமதையமாக இமெயில் முகவரியை சமர்பிக்கும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக கடன் சேவை தொடர்பான தகவலை பெற விரும்பும் போது உண்மையான இமெயில் முகவரியை சம்ர்பிக்க தயக்கம் ஏற்படலாம்.ஆனால் கடன் சேவை தொடர்பான தகவல்கள் இமெயில் மூலம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்போது நாட் ஷேரிங் மை இன்போ தளத்திற்கு சென்று உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால் அது அதற்கு மாற்றாக இரு இணைய முகவரியை அளிக்கும்.இமெயில் முகவரி மறைக்கப்பட்ட அந்த முகவரியை நீங்கள் தேவையான இடத்தில் தைரியமாக சமர்பிக்கலாம்.
அதன் பிறகு இமெயில்கள் உங்கள் இன்பாக்சிற்கு பார்வேர்டு செய்யப்பட்டு விடும்.
இணையத்தில் உங்கள் அடையாலாம் தெரியாமல் தொடர்பு கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் இந்த மறைமுக இமெயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://notsharingmy.info/

சீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles


இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர். 
இந்திய மொபைல் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இன்னும் எவ்வளவோ துறைகளில் சீனா காலை பதித்து விட்டது. சீன விட நாங்க பெரிய ஆளு எங்க கிட்டயும் அது இருக்கு இது இருக்குன்னு வாய் வார்த்தையில் மட்டுமே சொல்லி கொண்டிருக்கையில் சீனா காரன் கிட்ட நம்ம இந்திய வர்த்தகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுதுமென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் சீன மொபைல்களில் உபயோகிக்க கூடிய சில ரகசிய குறியீடுகளை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்கு தேவையானதை இதன் மூலம் செய்து கொள்ளுங்கள்.


சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்: 
  • Default user code: 1122, 3344, 1234, 5678
  • Engineer mode: *#110*01#
  • Factory mode: *#987#
  • Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
  • Restore factory settings: *#987*99#
  • LCD contrast: *#369#
  • Software version: *#800#
  • Software version: *#900#
  • Set default language: *#0000# Send
  • Set English language: *#0044# Send
  • Set English language (new firmware): *#001# Send
  • GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
  • Set Engineer Mode *888*888#
  • Set Engineer Mode *#3646633#
  • Set Engineer Mode ***503#
Codes to Change Screen Language:
  • Set Default Language :  *#0000# + Send 
  • Set Language to Russian:  *#0007# + Send 
  • Set Language to French:  *#0033# + Send 
  • Set Language to Spanish:  *#0034# + Send 
  • Set Language to Italian:  *#0039# + Send
  • Set Language to English:  *#0044# + Send 
  • Set Language to German:  *#0049# + Send
  • Set Language to Thai:  *#0066# + Send
  • Set Language to Vietnamese:  *#0084# + Send
  • Set Language to Arabic:  *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
  • *#987*99#
  • *#77218114#
  • *#881188#
  • *#94267357#
  • *#9426*357#
  • *#19912006#
  • *#118811#
  • *#3646633#
  • *#6804#
டிஸ்கி: நண்பர்களே சீனா மொபைகளில் ஒவ்வொன்று ஒரு மாடலில் இருப்பதால் இது அனைத்து மொபைகளுக்கும் பொருந்தும் என  உறுதியாக கூற முடியாது.