ஒரு காலத்தில் காமிக் (Comic) படங்கள் பெரும்பாலும் பலதரப்பட்ட மக்களின் பாராட்டையும் அன்பையும் பெற்று வளர்ந்துவந்தது என்றால் அது மிகையாகாது, விளம்பரங்கள் மூலம் வருமானம் தேட விரும்புபவர்கள் பெரும்பாலும் காமிக் படங்களை கொண்டே பலதரப்பட்ட மககளிடம் செல்வாக்கையும் பெற்றனர், ஆண்டுகள் பல சென்றாலும் காமிக் படங்களுக்கு இருந்த வரவேற்பை பொருத்து கூகிள் தற்போது புதிதாக ஒரு காமிக் புத்தகம் வெளியீட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் பத்திரிகைகளில் வெளிவரும் காமிக் கதைகள், வாரந்தோறும் வெளிவரும் சிறுகதைகள் முதல் நெடுங்கதைகள் வரை அனைத்திலுமே காமிக் படங்களின் பங்களிப்பு இருக்கும் இதே போல் ஒரு முறையை தேர்ந்தெடுத்து கூகிள் தன் சேவையைப் பற்றி அழகாகவும் விளக்கமாகவும் சொல்கிறது.
இணையதள முகவரி:http://www.google.com/googlebooks/chrome/small_00.html
எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் நம் கூகிள் , தன் குரோம் உலாவியைப் பற்றியும் அது கொடுக்கும் சேவையப் பற்றியும் காமிக் புத்தகம் வடிவில் கொடுத்துள்ளது. செப்டம்பர் 2008 -ல் முதன் முதலாக கூகிள் குரோம் காலடி எடுத்து வைத்தது அன்று முதல் இன்று வரை கூகிளின் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை கதை வடிவமாகவும் படமாகவும் காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுக்கிறது. அறிவியல் மற்றும் புனைவுத்தொடர்புடைய அமெரிக்காவின் முன்னனி கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்ல வேண்டிய வார்த்தையை கார்டூனில் காட்டி உலக மக்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவர் தான் கூகிள் குரோம்-ன் காமிக்புத்தகத்தை வடிவமைத்துள்ளார், புதிதாக குரோம் பற்றி அறிந்த கொள்ள விரும்பும் நபர்களுக்கு இந்தக் காமிக் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment