பதிவர்களாகிய நமக்கு படங்கள் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற கருத்திற்கு இணங்க பதிவுகளில் வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது நகைச்சுவைக்காகவும் நாம் படங்களை தேடியந்திரங்கள் மூலம் கண்டறிந்து நம் பதிவுகளில் போடுகிறோம். ஆனால் அனைத்து படங்களையும் நாம் காப்பி செய்வது இணைய சட்டப்படி தவறாகும். சில படங்களை உரிமையாளர்கள் Copyright செய்து வைத்திருப்பார் அது போன்ற படங்களை நம்முடைய பதிவுகளில் போடுவது தவறாகும். உரிமையாளர் நினைத்தால் நம் மீது வழக்கு தொடரும் அளவுக்கு விதி முறை உள்ளது.
நாங்க ஏதோ ஒரு மூலைல இருக்கோம் எங்க பதிவுல போடுறத எப்படிங்க கண்டுபிடிப்பாங்க என்று நீங்க சொன்னால் அதுக்கும் கூகுளில் வழி Search by Image உள்ளது. ஒரு படத்தை கொடுத்து தேடினால் அந்த படம் எங்கெங்கு உபயோக படுத்தப்படுகிறது சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.(எந்த பக்கம் போனாலும் கேட் போடறாங்களே ஹீ ஹீ)
இந்த பிரச்சினையை தவிர்க்க இணையத்தில் எப்படி இலவச படங்களை டவுன்லோட் செய்வதுன்னு பார்ப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான சர்ச் என்ஜினான கூகுள் இந்த வசதியை நமக்கு வழங்குகிறது.
கூகுள்
கூகுளில் இலவச போட்டோக்களை தேட Google Image தளத்திற்கு சென்று அங்கு உள்ள Advanced Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் இதில் Usage rights என்ற இடத்தில் உள்ள Drop down மெனுவில் க்ளிக் செய்து Labeled for commercial reuse with modification என்பதை தேர்வு செய்யவும்.
- என்று கொடுத்து விட்டால் போதும் இப்பொழுது நீங்கள் கூகுல் இமேஜில் படங்களை தேடி பாருங்கள் உங்களுக்கு வரும் முடிவுகள் அனைத்தும் இலவச போட்டோக்களே வரும் அறிவிப்புடன் கீழே பாருங்கள்.
- இந்த படங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் Copy right பிரச்சினையே இல்லை.
- இந்த வழி நமக்கு இருக்க நாம் ஏன் மற்ற படங்களை போட்டு சிக்கலில் மாட்டி கொள்வானேன்.
இதையும் பாருங்கள்
அடச்சீ என்னடா இது மூடவே மாட்டேங்குது யாராவது வர்றதுக்குள்ள ஒளிஞ்சிடலாம்னு பார்த்தா இப்படி பண்ணுதே
No comments:
Post a Comment