Sunday, August 28, 2011

இணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta



கூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுசர் பல சிறப்பான வசதிகளால் வாசகர்களால் கவரப்பட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது வளர்ச்சியில் சென்று கொண்டுள்ள ஒரே பிரவுசன் கூகுள் குரோம் தான். IE மற்றும் Firefox தன்னுடைய நிலையில் இருந்து கீழே நோக்கி சென்று கொண்டு உள்ளது. எளிமையும்,வேகமும் இந்த உலவி இவ்வளவு தூரம் வளர காரணமாகும் மற்றும் அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகப்படுதுவதாலும் வாசகர்கள் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர்.

எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோம் இதன் எளிமை தான். தேவையில்லாத வசதிகளை குப்பைகளை போல் அடுக்காமல் என்ன வசதி வேண்டுமோ அதை மட்டுமே வெளியிடுவது இதன் சிறப்பு.  இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய பதிப்பை உருவாக்கி உள்ளனர்.

எப்பொழுதும் போல தற்போது இதை சோதனை(Beta) நிலையிலேயே விட்டுள்ளனர். க்ரோம் உலவியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இணைய வேகத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். டவுன்லோட் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மென்பொருளை டவுன்லோட் செய்ய Google Chrome 14 Beta

No comments:

Post a Comment