இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து கொண்டிருக்கும் கூகிளை விட, வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு,
தேடலைப் பொருத்தவரை கூகிள் கொடுக்காத சேவை என்றும் ஏதுவும் இல்லை , இருந்தும் கூகிளில் பல சேவைகளைப்பற்றி மக்கள் இன்றும் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர், வகை வாரியாக தேடுவதில் கூகிளை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.helioid.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்ற கட்டத்திற்குள் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் கொடுத்த வார்த்தைக்கு வகையான தளங்களை மட்டும் பிரித்து நமக்கு காட்டுகிறது. தேடல் முடிவுகளும் கூகிளை விட சிறப்பானதாகவே தெரிகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் கூகிளில் சென்று தேடி நமக்கு சரியான விடை கிடைக்காதபோது இதைப்பயன்படுத்தி பார்த்தால் உண்மை தெளிவாக புரியும். முகப்பு பக்கத்தில் லோகோவும் பொத்தான் படமும் தவிர பெரிதாக ஏதும் இல்லை , தேடல் முடிவுகளும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கிறது. இதேத் தேடலை கூகிளிலும் தேடலாம் எப்படி என்றால் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை “ “ ( அடைப்புக்குறி) கொடுத்து தேடினால் அதே வகையுள்ளதை காட்டும். ஆனால் கூகிள் காட்டும் தளங்களை விட இந்தத்தளம் சிறப்பாகவே தன் வேலையைச் செய்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் தேடலில் மாற்றம் விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment