முக நூலில் நாளொன்றில் 250 மில்லியன் படங்கள் (Photos) தரவேற்றப்படுகின்றன. இவ்வாறு மிகப் பெரிய எண்ணிக்கையில் படங்கள் தரவேற்றப்படுவதோடு மற்றவா்களுடன் பகிரவும் படுகின்றன.
இவ்வாறு தரவேற்றப்படும் படங்களைப் பார்வையிடும்போது அதன் அளவானது இதுவரை 720 Px (Pixels) என்ற காட்சித் தெளிவில் (சிறிதாக) காட்டப்பட்டன. இனி இந்த அளவானது 960 Px என்ற அளவுக்கு (சற்றுப் பெரிதாக) மாற்றப்படுகின்றது. இதன் மூலம் படமானது கூடிய தெளிவில் தெரிவதுடன் சற்றுப் பெரிதாகவும் தெரியும். ஏற்கனவே தரவேற்றப்பட்ட படங்களும் இந்த அளவில் காட்டப்படும்.
அத்தோடு படங்களை பார்வையிடும் போது பின்னணியில் கறுப்பு நிறத்திற்குப் பதில் வெள்ளை நிறத்தில் படம் தோன்றும்.
அது மாத்திரமில்லாமல் படங்கள் தோன்றும் நேரம் (Loading Time) குறைக்கப்பட்டு வேகமாக தோன்றும் (Faster Loading) விதமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று முக நூல் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment